
புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத் – தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளும சட்டுப் – புலையேனைக்
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் – டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள்து திக்கக் – கருதாதோ
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் – பொரும்வேலா
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் – புணர்மார்பா
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகைமு ழக்கப் – புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பூசலிட்டு (திருத்தணிகை) – திருப்புகழ் 283