முடித்த குழலினர் (திருத்தணிகை) – திருப்புகழ் 293 

முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தி லிலகிய – விழியாலும்

முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
இளைத்த இடையினு – மயலாகிப்

படுத்த அணைதனி லணைத்த அவரொடு
படிக்கு ளநுதின – முழலாதே

பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரிணை – யருள்வாயே

துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
தொடுத்த சரம்விடு – ரகுராமன்

துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு – மருகோனே

தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
தழைத்த கதலிக – ளவைசாயத்

தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
தழைத்த சரவண – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : முத்துத் தெறிக்க (திருத்தணிகை) – திருப்புகழ் 294 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *