வஞ்சக லோப மூடர் (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 306 

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது – பலபாவின்

வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி – லழியாதே

செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர – முகமாறும்

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ – லருள்வாயே

பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு – சமண்மூகர்

பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு – தருவோனே

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி – வெறியாடிக்

கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதோ றாடல் மேவு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அலைகடல் நிகராகிய (ஆறு திருப்பதி) – திருப்புகழ் 307 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *