உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள்

udal vepathai thanikum unavukal

பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் இருந்தால் அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது. தற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அதிகமாகும் வாய்ப்புள்ளது. இவை உடலில் வெப்பத்தை மட்டும் அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.

முலாம் பழம்

உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியை குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.

இளநீர்

உடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

வெந்தயம்

மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியம் என்றால், அது தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது தான். இதனால் உடல் வெப்பமானது எளிதில் தணியும்.

புதினா

இயற்கை வைத்தியத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள், புதினா ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்

முள்ளங்கி

முள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

எள்

தினமும் எள் சாப்பிட்டாலும், உடல் வெப்பமானது எளிதில் தணியும். மேலும் உடலில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கும்.

சீரகம்

சீரகத்தை இரவில் படுக்கும் போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரை காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.

மாதுளை

மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தாலும், உடல் கூலாக இருக்கும்.

கசகசா

நாள்தோறும் இரவில் தூங்கும் முன், ஒரு கை கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், நல்ல நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, உடல் வெப்பமும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

குளிச்சியான பால்

குளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.

நுங்கு

பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு பனை நுங்கு. நுங்கில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடை காலங்களில் அதிகம் விற்கப்படும் நுங்கினை அதிகளவு வாங்கி சாப்பிடுவதினால் உடல் சூடு குறையும், மேலும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

பதநீர்

பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு இனிப்பான பானம் பதநீர். பதநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், உடல் சோர்வை குறைக்கும். இவற்றில் சுண்ணாம்பு சத்து மற்றும் ஏராளமான கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

நீர் மோர்

மோர் குறிப்பாக வயிற்றை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். வெயில் காலத்தில் காரமான உணவுகளை சாப்பிட்டு விட்டால் சிலருக்கு அதிகப்படியான வயிறு வலி ஏற்படும் அல்லது வயிற்று போக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை சரி செய்ய தினமும் காலை வெறும் வயிற்றில் நீர் மோர் அருந்தலாம்.

நீராகாரம்

கோடைகாலங்களில் தினமும் காலையில் சாப்பிட வேண்டிய மிகவும் அற்புதமான உணவு நீராகாரம். உடல் சூட்டை குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள தினமும் காலை உணவாக நீராகாரம் சாப்பிடுங்கள்.

கம்பங்கூழ்

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணம் குறைய மற்றும் உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தினமும் காலையில் கம்பங்கூழ் சாப்பிடுங்கள். இதனால் உடல் என்றும் குளிர்ச்சியாக இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் பலரும் விரும்புவது சில் என்ற எலுமிச்சை ஜூஸ் தான். வெயிலில் கலைத்து வருபவர்களுக்கு எலுமிச்சை ஜூஸில் உள்ள சர்க்கரை சத்து உடனடி ஆற்றல் அளிக்கும். எலுமிச்சை புத்துணர்வு அளிக்கிறது.

உடலை குளிர்விப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எலுமிச்சை ஜூஸ். உச்சி வெயிலில் அலைந்துவிட்டு அதிக சில் என்று ஜூஸ் அருந்த வேண்டாம். அது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தி விடும். மிதமான குளிர்ச்சி கொண்ட ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *