மிளகு நம் தினசரி உணவில் பயன்படுத்த படும் ஒரு மசாலா பொருள் ஆகும். ஒரு சிறு மணியளவு தோற்றம் கொண்ட மிளகு வெப்பம் மற்றும் காரமான சுவையுடன் அறியப்படுகிறது.
மிளகு எண்ணற்ற ஊட்டசத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சினைகளுக்கு மிளகு ஒரு நல்ல மூலிகை மருந்தாகும்.
அஜீரணம் மற்றும் வாய்வுக்கான ஒரு பாரம்பரிய மருந்தாக மிளகு சிறந்து விளங்குகிறது. மிளகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். இதனால் நோய்கள் தாக்காமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.
மிளகில் உள்ள சத்துக்கள்
- கால்சியம்
- இரும்பு
- காப்பர்
- மெக்னீசியம்
- பாஸ்பரஸ்
- வைட்டமின் பி 12
- வைட்டமின் பி 6
- வைட்டமின் சி
- நார்சத்து
செரிமானம் சீராக
நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போனால் வயிற்றுப் போக்கு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
செரிமானம் சீராக நடைபெறுவதற்கு கருப்பு மிளகு மிகவும் உகந்தது. உணவில் மிளகை சேர்த்து சாப்பிடும் பொழுது அவை வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை அதிகமாக சுரக்கச் செய்து நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானம் ஆக செய்கிறது.
தினமும் சமையலில் ஒரு டீஸ்பூன் மிளகை சேர்த்து கொள்வதின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க முடியும்.
அஜீரணமா
மிளகு, சிறிய இஞ்சி மற்றும் கல் உப்பு என இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து அதில் ஒரு அரை ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்தல் அஜீரண கோளாறு நீங்கும்.
வாய்வு தொல்லை நீங்க
மிளகில் உள்ள கார்மநேட்டிவ்கள் உடலில் இருந்து வாய்வு எளிதாக வெளியேற உதவி செய்கின்றன.
வாய்வு தொல்லை நீங்க சிறிது மிளகு எடுத்து அதை ஒரு இரண்டு கிளாஸ் அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின்பு அந்த தண்ணீரில் சிறிது பனவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொந்தரவு நீங்கும்.
தொண்டை வலி
சிறிது மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து அந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நீங்கும்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் மிளகு, நெய் மற்றும் தேன் சேர்த்து வந்தால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடலாம் .
பல் வலி தீர
ஒரு டீஸ்பூன் மிளகு தூளை ஒரு கப் தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி நீங்கும்.
ஆண்மை குறைவு நீங்க
மிளகு மற்றும் நான்கு பாதம் பருப்புகள் சேர்த்து சாப்பிட்டு அத்துடன் ஒரு கிளாஸ் பால் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கைகளையும் அதன் செறிவையும் அதிகரிக்கும். ஆண்மை குறைவு நீங்கும்.
இருமல் மற்றும் சளி
நான்கு முதல் ஐந்து மிளகை பொடியாக அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சளி நீங்கும்.
இருமல் தீர மூன்று கிராம் மிளகு தூள் செய்து ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். மனச்சோர்வு நீங்க கருப்பு மிளகு பொடியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தொண்டை வலி நீங்க
ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் சம அளவு சர்க்கரை மற்றும் நெய்யுடன் ஒரு பேஸ்ட் செய்து படுக்கைக்கு முன்பு இதை எடுத்துக் கொள்ளுங்கள், இதற்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம்.
சிறிது மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து அந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நீங்கும்.
பசி அதிகரிக்க
கருப்பு மிளகின் உள்ள வாசம் பசியை தூண்ட செய்கிறது. அரை டீஸ்பூன் மிளகு மற்றும் சிறிது வெல்லம் தூள் கலந்து சாப்பிட்டால் பசி அதிகரிக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சில கருப்பு மிளகுகளை வாயில் போட்டு மென்று வந்தால் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
கருப்பு மிளகு உடலில் இருந்து நச்சுகளை வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
மிளகில் உள்ள பிபரின் மூளையின் செரோட்டனின் என்கிற இரசாயனத்தை சுரக்க செய்து மனைச் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடு பட உதவுகிறது.
தினமும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு வைத்திருப்பது குடும்பத்தை நுண்ணுயிர்களிலிருந்து பாதுகாக்கும். அவற்றை எதிற்கும்.
உணவுகளில் கருப்பு மிளகை சேர்ப்பதால் சுவர்களில் இருந்து அதிகப் படியான கொழுப்பை நீக்குவதின் மூலம் தமணிகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைத்து நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குகிறது.
குறிப்பு
மிளகு உடல் சூட்டை அதிகரிக்க செய்யும். அதனால் அதை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.