பொடுகு பிரச்சனை இல்லாதவர்களே இல்லை. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருமே இதை சந்திக்காமல் இல்லை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே சரிசெய்யலாம்.
வெந்தயம்
வெந்தயம் சமையலுக்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் சிறந்த நன்மைகள் செய்கின்றன. வெந்தயம் போல் ஒரு குளிர்ச்சியான பொருள் வேரு ஏதுவுமில்லை. வெறும் தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊற வைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுக்கு குட் பை சொல்லாம்.
அதே போல், ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.
கற்றாழை
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
இலுப்பை புண்ணாக்கு
இலுப்பை புண்ணாக்கு நாட்டு மருந்து கடையில் எளிதில் கிடைக்கும் ஒரு பொருள். இதை இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும்.
இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.
வேப்பிலை
வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு, தொல்லை நீங்கும்.
துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
மருதாணி
மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.
நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலை மாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர பொடுகு நீங்கும்.
தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
முட்டை
சாதம் வடித்த முதல்நாள் தண்ணீரை எடுத்து மறுநாள் அதை தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை சமமான அளவைக் கொண்டு ஒரு பசையை தயாரித்து. அதனை தலை முடி ஸ்கால்ப்பில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள்.
20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் பொடுகு பிரச்சனை மிக விரைவில் சரியாகும்.
இதையும் படிக்கலாம் : வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்க சில வழிகள்..!