தயிர் சாப்பிடுவது உடலுக்கு உள்ளே எவ்வளவு நன்மைகளை கொடுக்குமோ, அதே அளவிற்கு முகத்தில் பயன்படுத்தும் போது பல நன்மைகளை கொடுக்கிறது.
தினமும் வீட்டில் பயன்படுத்தபடும் தயிர் மீதமாகும் போது அவற்றை அழகுக்கு பயன்படுத்தினாலே போதும். தயிரை பயன்படுத்துவதால் பழைய சரும செல்கள் அகன்று, ஆரோக்கியமான புதிய செல்கள் வளர்வதால் சருமம் இன்னும் ஜொலி, ஜொலிக்கும்.
இந்த தயிருடன் ஒரு சில பொருட்களைச் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகம், பொலிவோடு அழகாக காணப்படும்.
தயிர் மற்றும் அரிசி மாவு
1/ 2 ஸ்பூன் அரிசி மாவுடன், 1 ஸ்பூன் தயிரை கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி 3-5 நிமிடங்கள் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் எண்ணெய் அல்லது கலவையான சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
தயிர் மற்றும் எலுமிச்சை
1 ஸ்பூன் தயிருடன், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பின் முகத்தை நீரால் கழுவிக் கொண்டு, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு 2 முறை இதை பயன்படுத்துவதால், முகம் பொலிவாக காட்சியளிக்கும்.
தயிர் மற்றும் கற்றாழை ஜெல்
1 ஸ்பூன் தயிருடன், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் எப்போதும் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
இதையும் படிக்கலாம் : உதடு வெடிப்புக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்
தயிர் மற்றும் தக்காளி
அரைத்த தக்காளி பேஸ்ட் உடன் 1 ஸ்பூன் தயிரை கலந்து பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
தயிர் மற்றும் தேன்
1 ஸ்பூன் தயிருடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
தயிர் மற்றும் பப்பாளி
பப்பாளி கூழுடன், 2 ஸ்பூன் தயிரை கலந்து, பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சருமம் அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
தயிர் மற்றும் பால் பவுடர்
1/2 ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 ஸ்பூன் தயிரை கலந்து பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 5-10 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் பார்க்கலாம்.
இதையும் படிக்கலாம் : முருங்கை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்