ஜோதிடம் மற்றும் அவை கூறும் ராசிபலன்கள் ஆகியவற்றில் அதிக நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். உங்கள் ராசிக்கும் உங்களுக்கும் இடையே நிறைய கனெக்ஷன் இருக்கிறது. இந்த தொடர்பு உங்கள் உணவுப் பழக்க வழக்கத்திலும் அப்படியே பிரதிபலிக்கும்.
எந்த ராசிக்காரர் எந்த உணவு சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷராசிக்காரர்கள் இயற்கையிலேயே அதிக காரம் மற்றும் உப்புச் சுவையினை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் காலிஃப்ளவர், பிரக்கோலி, கீரைகள், பீன்ஸ், பழுப்பு அரிசி, பருப்பு வகைகள், வெள்ளரிக்காய், வால்நட்ஸ், உலர்ந்த ஆப்ரிகாட்ஸ், வாழைப்பழம், அத்தி பழம் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக காரம், ஆல்கஹால் மற்றும் புளிப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையிலேயே புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையை அதிகம் விரும்புபவராக இருப்பார்கள். இவர்கள் பச்சை காய்கறிகள் அடங்கிய சாலட், நட்ஸ், பீன்ஸ், க்ரான்பெர்ரி, கடல் உணவுகள் மற்றும் முட்டை போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு, காரம் சரியாக இருந்தால் தான் இவர்கள் சாப்பிடுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகள், இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையினை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புளிப்பு மற்றும் காரம் அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். இதனாலேயே இந்த ராசிக்காரருக்கு வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் சீக்கிரமே வந்து விடும். இவர்கள் பால், பட்டர் மில்க், சீஸ், பாதாம் பருப்பு, திராட்சை பழம், பீச் பழங்கள், ஆரஞ்சு, ஆப்பிள், ப்ளம்ஸ், அஸ்பாரகஸ் மற்றும் சிப்பிகள் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் காபி, ஆல்கஹால், காரட், பீட்ரூட், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே காரம் மற்றும் இனிப்பை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் கீரைகள், பார்சிலி, சிப்பிகள், ஆரஞ்சு, முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் எண்ணெய் உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்புச் சுவை உடையவற்றை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே காரம் மற்றும் உப்பு சுவைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை பழங்கள், எலும்பிச்சை பழம், அத்தி பழம், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, பீட்ரூட், அஸ்பாரகஸ், பேரிக்காய் மற்றும் கடல் உணவுகள் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் காரம் சம்பந்தமான உணவுகள், பால் பொருட்கள் மற்றும் அதிகமான எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே புளிப்பு மற்றும் இனிப்புச் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் கோதுமை பிரட், முட்டை, பாதாம் பருப்பு, ஓட்ஸ், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், லெமன் ஜூஸ், காட்டேஜ் சீஸ் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் சாக்லெட் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நன்மையைக் கொடுக்கும். இவர்கள் முழு தானியங்கள், காரட், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, ஓட்ஸ், உலர்ந்த திராட்சை பழங்கள், ஆப்பிள், கடல் உணவுகள், பாதாம் பருப்பு, யோகார்ட், சிக்கன் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் மாவு சம்பந்தமான பொருட்கள் மற்றும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவர்களுக்கு சீக்கிரமே செரிமானக் கோளாறு ஏற்படலாம். மேலும் அதிகமான காபி, செயற்கை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே அதிக காரம் மற்றும் உப்புச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் வாழைப்பழம், சீஸ், கூனைப்பூக்கள், பச்சை காய்கறிகள், நீர்வளர் தாவரம், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, தேங்காய், யோகார்ட், அன்னாசி போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் எண்ணெய் மற்றும் உப்பு அதிகமான உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதேவேளையில் அதிக காரம் இவர்களது உடல் நலத்திற்கு தீங்கானது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயற்கையிலேயே திரவ ஆகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். உடம்பில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் அடிக்கடி நிகழலாம். இவர்கள் ஓட்ஸ், ப்ளம்ஸ், ஸ்ட்ரா பெர்ரி, செர்ரி, அஸ்பாரகஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, அத்தி பழம், மீன், முட்டை, முழு தானியங்கள், ஆரஞ்சு, பால், யோகார்ட் மேலும் அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்த ராசிக்காரர்கள் இனிப்பு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, ஆல்கஹால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதே வேளையில் புளிப்பு சம்பந்தமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் உணவு சம்பந்தமான விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்தெந்த உணவோடு எந்த உணவை சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்கிற நுட்பத்தைத் தெரிந்தவர்கள். இவர்கள் முளைக்கட்டிய தானியங்கள், ஆரஞ்சு, லெமன், முட்டை கோஸ், பச்சை காய்கறிகள், நிலக்கடலை, ஆளி விதைகள், மக்காச்சோளம், அத்திப்பழம் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் சாக்லேட், கார்போஹைட்ரேட் மற்றும் காரசாரமான உணவுகள், இனிப்பு சம்பந்தமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை சூடாகச் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். இவர்களுடைய உணவில் கட்டாயமாக கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையை மிகவும் விரும்புவார்கள். இவர்கள் மக்காச்சோளம், கேரட், ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், தக்காளி, முட்டை கோசு, பிரக்கோலி, அத்தி பழம், பேரிச்சம்பழம், பூண்டு, இஞ்சி, நட்ஸ் மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர் உடல்வாகு இயற்கையிலேயே குளிர்ச்சியான உடல்வாகாக இருப்பதனால் இவர்கள் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல் நலம். மேலும் காபி மற்றும் ஸ்வீட்ஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பொறுத்தவரை காரம் மற்றும் இனிப்பு சுவை உணவுகளை அதிகம் விரும்புவார்கள். இவர்கள் காய்கறிகள், சாதம், வெங்காயம், கோதுமை, முழு தானியங்கள், ஓட்ஸ், ஆரஞ்சு, திராட்சை பழங்கள், லெமன், ஆப்பிள், பீச் பழங்கள், பேரிச்சம்பழம், ப்ளம்ஸ், இயற்கை சர்க்கரை மற்றும் கடற்பாசிகள் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசிக்காரர்கள் அதிக காரம் மற்றும் அதிக உப்பினைத் தவிர்ப்பது நல்லது. மேலும் காபி, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
எந்த ராசிக்காரர் எந்த உணவு சாப்பிடுவது நல்லது என்பதை தெரிந்து அவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.