இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.
இமயமலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இந்துப்பு, சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
இந்துப்பில் உள்ள கனிமங்கள்
இமயமலை உப்பு எனப்படும் இந்துப்பில், சாதாரண உப்பில் உள்ள சோடியம் குளோரைடுடன் (95-98%) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் கனிமங்களும் மற்றும் சில கனிமங்களும் கொண்டுள்ளது.
ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்துப்பில் பல மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்துப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
மலச்சிக்கல் சரி செய்யும்
பல்வேறு நோய்களுக்கு மலச்சிக்கலே அடிப்படையாக இருக்கிறது. அப்படி நோய்களின் அடிப்படையாக உள்ள மலச்சிக்கலைப் போக்குவதில் இந்துப்பின் பங்கு அதிகம்.
எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் பாதிப் பழத்தின் (வெட்டிய பாகத்தில்) மீது இந்துப்பை தூவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். முக்குற்றம் எனப்படும் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்களின் தன்மைகளை நீக்கி உடலை வலுவாக்கும்.
தசைப்பிடிப்பை சரிசெய்யும்
இந்துப்புவில் பல்வேறு எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால் இது சில தசைப்பிடிப்பு மற்றும் வலிகளை போக்க கூடும். எனினும் இது குறித்து ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ஸ்பூன் இந்துப்பை தண்ணீரில் கலந்து குடித்தால் சில நிமிடங்களில் தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம் தரும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
இந்துப்பை பயன்படுத்துவதால் பசி எடுக்க தொடங்கும். வாயு பிரச்சனை நீங்கும். நெஞ்செரிச்சல் இருந்தாலும் இந்துப்பை நன்மருந்தாக பயன்படும். ஆனாலும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
வறண்ட தொண்டைக்கு நிவாரணம் தரும்
அமெரிக்கன் கேனசர் சொசைட்டி அமைப்புகளும் இம்முறையை பரிந்துரை செய்கிறது. உப்பு இயல்பாகவே தொண்டை பிரச்சனையை சரி செய்யக்கூடியது. உப்பு நீர் கரைசலில் இந்துப்பு பயன்படுத்துவதன் மூலம் தொண்டைப்புண்ணுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
இந்துப்பை போட்டு வாய் கொப்பளித்து வர வறண்ட தொண்டை சரியாகும். இஞ்சித்துண்டை இந்துப்பில் தொட்டு பயன்படுத்தினாலும் வறண்ட தொண்டை சரியாகும். சுவாச நோய்த்தொற்றூகளுக்கு உப்பு நீரை சுத்தப்படுத்துவது பயன் தரக்கூடியது என்று 338 பேர் குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.
எடை குறைப்புக்கு உதவும்
இந்துப்பை சேர்த்துக்கொள்ளும்போது உடலில் இருக்கும் இறந்த கொழுப்பு செல்கள் வெளியேறும். இதனால் நம்முடைய உடல் எடை குறையும். இவை உடல் எடை குறைப்புக்கு அற்புதமான மருந்து இந்துப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தூக்கத்துக்கு உதவுகிறது
பொதுவாகவே மனிதன் நாள் ஒன்றுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம். அப்போதுதான் உடல் செயல்பாடுகள் குறையில்லாமல் சீராக இருக்கும். அடுத்த நாளுக்கான வேலையை செய்ய உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கு இந்துப்பு உதவக்கூடும்.
இந்துப்பு உடலில் மெலடோனின் அளவை ஒழுங்குப்படுத்துகிறது. இது நமது தூக்க சுழற்சியை கட்டுப்படுத்தக்கூடியவை. மேலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்துக்கு சிகிச்சையளிக்கவும் இவை உதவுகிறது.
சருமத்துக்கு நல்லது
நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள், முதுமையான தோற்றத்தை தருகிறது. இந்துப்பை பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். இதனால் இளமை திரும்ப கிடைக்கும்.
உப்பைக்கொண்டு உடலை மசாஜ் செய்வதன் மூலம் இறந்த செல்களை உடம்பிலிருந்து நீக்க முடியும். மற்ற சோப்களை விட இந்துப்பு, சருமத்தில் இருக்கும் துளைகளில் படியும் அழுக்கை நீக்கி சருமத்தின் சுவாசத்துக்கும் உதவும்.
வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது
உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு இந்துப்பு உதவுகிறது. உடலில் சில வேதியியல் எதிர்வினைகள் நடப்பதுண்டு. இது செல்கள் மற்றும் உயிரினங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் இறுதியில் உடலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இந்த இந்துப்பை பயன்படுத்தப்படலாம்.
இதையும் படிக்கலாம் : ஃப்ரைடு ரைஸ் அடிக்கடி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?