சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணங்களின் வகைகள்
முழு சூரிய கிரகணம்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது, அதன் ஒளியை அதன் பின்னால் முழுமையாக மூடி, முழு இருளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நிலை முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
பகுதி அல்லது பிரிவு சூரிய கிரகணம்
சந்திரன் சூரியனுக்கு முன்னால் வந்து அதை மறைக்கும் போது ஏற்படுவது பகுதி அல்லது பிரிவு சூரிய கிரகணம் ஆகும். ஆனால் சூரியனின் சில ஒளி அதை மறைக்காது.
கங்கண சூரிய கிரகணம்
சூரியனுக்கு முன்னால் சந்திரன் வரும்போது, அது சூரியனை நடுவில் மூடியதாகத் தோன்றும் வகையில் அதை மூடுகிறது, ஆனால் அதன் விளிம்புகளிலிருந்து வரும் ஒளி ஒரு வளையம் அல்லது மோதிரம் போல் தோன்றும்.
இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த காலம் சில தருணங்களுக்கு மட்டுமே. இந்த நேரத்தில் சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை நாளில்தான் உருவாகிறது.
சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
சூரிய கடவுளின் பீஜ் மந்திரத்தை உச்சரிக்கவும்.
கிரகணம் முடிந்தவுடன் தண்ணீரை தெளித்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதனுடன் பூஜையறையில் உள்ள தெய்வங்களின் சிலைகளையும் சுத்திகரிக்க வேண்டும்.
கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
சூரிய கிரகந்த்திற்கு பிறகு புதிய உணவை செய்து சாப்பிடுங்கள் முன்பு தயாரிக்கப்பட்ட உணவாக இருப்பின் அதில் துளசி இலைகளை போட்டு வைக்கவும். இதனால் உணவில் கிரகணத்தின் தீங்கு விளைவிக்கும் குறைபாடுகள் இருந்தால் நீங்கிவிடும்.
சூரிய கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை
கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக்கூடாது. அதற்கென தயாரிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்து கொண்டு தான் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடி பல மடங்கு ஒளியை குறைத்து, நம் கண்களுக்கு பாதுகாப்பான அளவு பார்க்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
சூரியனை நேரடியாக பார்க்க கூடாது. தண்ணீரில் சூரியனின் பிரதிபலிப்பைப் பார்க்க கூடாது. அதுவும் நம் கண்களைப் பாதிக்கும்.
கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
கிரகணத்தைக் காண சாதாரண சன்கிளாஸைப் பயன்படுத்தக் கூடாது.
புதிய மற்றும் மங்களகரமான பணிகளைத் தொடங்க வேண்டாம்.
கிரகண நேரத்தின் போது உணவை சமைத்து சாப்பிடக்கூடாது.
கழிப்பறைகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தனிப்பட்ட பணிகளான பற்களை சுத்தம் செய்தல், தலைமுடியை சீப்புதல், புதிய ஆடைகளை அணிவது, வாகனங்களை ஓட்டுவது போன்றவை செய்ய வேண்டாம்.
தூங்குவதைத் தவிர்க்கவும்.
கடவுள்சிலை மற்றும் துளசி சிலையைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை
அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் சூரிய கிரகணத்தின் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதையும் கிரகணத்தை எந்த வகையிலும் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் தையல், எம்பிராய்டரி, வெட்டுதல், மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
2022 சூரிய கிரகண தேதி மற்றும் நேரம்
பஞ்சாங்கத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, இந்த கிரகணம் மதியம் 12.15 மணிக்கு தொடங்கி மாலை 4.07 மணி வரை இருக்கும்.
இதையும் படிக்கலாம் : இறைவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன் தெரியுமா..?