/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கோடை காலத்தில் ஏற்படும் அரிப்பு சமாளிக்க வழிகள்..!

கோடை காலத்தில் ஏற்படும் அரிப்பு சமாளிக்க வழிகள்..!

erosion control tips

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் வேர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் இந்த பிரச்சனை பலருக்கு தற்போது வருகிறது. இதை தவிர்க்க வேண்மெனில் சில விஷயங்களை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

உள்ளாடைகளை துவைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே காயப்போடுவது கூடாது. வெயிலில் காயப்போட வேண்டும். அதன்பிறகு தான் அணிய வேண்டும்.

மற்றவர்களின் பனியன் உள்ளிட்ட உள்ளாடைகளை அணியக்கூடாது.

காலை மற்றும் மாலை இரண்டு முறையும் உள்ளாடைகளை மாற்றுவது நல்லது.

அரிப்புக்குக் காரணமாக பூஞ்சான் கிருமி, யாரிடம் இருந்து வேண்டுமென்றாலும் வரலாம்.

நீங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளிடம் இருந்து கூட அரிப்பு பிரச்சனை வரலாம்.

அரிப்பு பிரச்சனை வந்த பிறகு செய்ய வேண்டியவை

  • வீட்டில் உள்ள ஏதேனும் ஓரு மருந்தையோ, நண்பர்கள் கூறியதாக ஏதேனும் ஓரு மருந்தையோ அல்லது மருந்துக்கடையில் அவர்கள் கொடுக்கும் மருந்தையோ போடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் சுயமருத்துவம் காரணமாக பூஞ்சான் கிருமிகள் உடலில் இருந்து அழிவதில்லை.
  • தோல் மருத்துவரிடம் சென்று பிரச்சனையை கூறுங்கள். அவர்கள் தரும் மருந்தை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவாரம் மருந்தை எடுத்துகொண்டேன் சரியாகிவிட்டது என்று நிறுத்தக்கூடாது. மருத்துவர்கள் எத்தனை நாளுக்கு கொடுக்கிறார்களோ அத்தனை நாளைக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
  • அதன் பிறகு மருத்துவரிடம் சென்று எப்படி இருக்கிறது என்பதை கூறுங்கள். அப்போது சென்றால் உங்களுக்கு இன்னும் சிகிச்சை அவசியம் எனில் மருத்துவர்கள் தருவார்கள்.
  • இதேபோல் பக்கத்தில் உள்ளவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்து பட்டியலை பயன்படுத்தாதீர்கள்.
  • இதேபோல் பூஞ்சான் கிருமி பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வரலாம். எனவே அவர்களையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
  • அரிப்புக் காரணமாக இந்த பூஞ்சான் கிருமிகளை அழிக்க முறையான சிகிச்சை அவசியம். சில நாட்களில் குணமாகக்கூடிய அளவில் இப்போது உள்ள அரிப்பு பிரச்சனைகள் இல்லை. எனவே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.
  • அதுவரை கைமருத்துவம், பார்மஸில் மருந்துகள் வாங்குவது, உள்ளிட்ட பழக்கங்களை செய்யாதீர். அப்படி செய்தால் பூஞ்சான் கிருமிகளின் தாக்கம் இன்னும் அதிகமாகும். அரிப்பும் குறையாது.

இதையும் படிக்கலாம் : கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *