விளம்பரம் செய்த மாயை..!!!

vilambaram seitha mayai

அரிசிச்சோறு சாப்பிட்டா சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிடச் சொன்னாங்க. அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான், பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.

சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சிமருந்து தெளிக்கறாங்க. ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.

போய்ப் பார்த்தா ஆனை விலை, குதிரை விலை. இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.

இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர், வாடின, வதங்கிய காய்தான் ஆர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.

விளம்பரம் செய்த மாயை

பேஸ்ட்

உப்பையும், சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம்.

இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால பேஸ்ட் தான் நல்லதுன்னு சொன்னாங்க.

அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி.

கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கான்னு கேக்குறான்.

பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதானே?

சீனி(அஸ்கா)

நாட்டுச்சக்கரையை/வெல்லத்தை/கருப்பட்டியை விட சீனி(அஸ்கா) தான் சுத்தமானது சுவையானதுன்னு சொன்னீங்க.

இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கலும் இருக்கு. இப்ப அந்த சீனி மாதிரி விஷம் எதுவும் இல்லைனு சொல்லுறீங்க.

RO பில்டர்

என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா, அது ஆபத்து RO பில்டர் டெக்னாலஜில சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு சொன்னாங்க. ஒரு மெசினை வாங்கி மாட்டினோம் உடனே அதுல சத்து இல்ல, எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது.

மறுபடியும் பச்சதண்ணிய அப்படியே குடிக்கச் சொல்றீங்க.

மாடிதோட்டம்

மாடிதோட்டம் போட்டு நாட்டுக் காய்கறி விதைகளைப் போடு, பொடக்காலியில செடி நடு, ஆபிஸ் (ஹைபிரிட்) விதைகள் வேண்டாம், மரபு மாற்றப்பட்ட விதைகள் வேண்டாம்.

உனக்குத் தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு, நாட்டுக் கோழி வளர்த்தா முட்டையும் சிக்கனும் கிடைக்கும். தண்ணிய கொதிக்க வச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி, ஒரு நோயும் வராதுன்னு சொல்றாங்க.

அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா நாங்கள் எல்லோரும் வாழ்ந்தோம்.

பட்டணத்துக்கு வா சொகுசாக வாழலாம்னு சொல்லி வரவச்சுட்டு, பொய்யான தகவல்களைச் சொல்லி இப்ப திருப்பி எங்க முன்னோர்கள் சொன்னது எல்லாம் சரி, அவங்க செஞ்சது எல்லாம் சரினு சொல்றீங்களே? இது நியாயமா??

விளம்பரம் செய்த மாயை இனியும் நம்பாமல் நம் முன்னோர் வழியை கடைபிடிப்போம்

இறுதியில் வஞ்சமில்லா வாழ்வை காவு கொடுத்துவிட்டோம். வெற்று விளம்பரங்களை நம்பி இனியும் ஏமாறும் மனநிலையிலிருந்து விலகுவோம்!!

இதையும் படிக்கலாம் : வெளிநாட்டில் தடை ஆனால் இந்தியாவில் விற்பனை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *