கரிசாலை என்று அழைக்கும் கரிசலாங்கண்ணி, நம்மருகே நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், நிலங்களிம் இருக்கும் ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கற்பமூலிகை (உடலை பலப்படுத்தும் மூலிகை).
கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
நெல் வயல்களிலும், காடுகளிலும் குறிப்பாகத் தண்ணீர் பாயும் இடங்களிலெல்லாம் தன்னிச்சையாகச் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைதான் கரிசாலை.
நடைமுறையில் கரிசாலை என்பது, இரண்டு வகைகளையுமே குறிக்கிறது. உடலின் உள்பகுதிகளுக்குச் சாப்பிடும் மருந்துகள் மஞ்சள் கரிசாலையிலும்; வெளிப்பகுதிகளுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் வெள்ளைக் கரிசாலையிலும் தயாரிக்கப்படுகின்றன.
இராமலிங்க வள்ளலார் தன் 6ம் திருமுறையில் கரிசாலையை ஒரு சிறந்த காய கற்ப மூலிகையாக குறிப்பிடுகிறார்.
பெயர்கள்
கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.
சத்துவிபரம்
100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
நீர் = 85%
மாவுப்பொருள் = 9.2%
புரதம் = 4.4%
கொழுப்பு = 0.8%
கால்சியம் = 62 யூனிட்
இரும்புத் தாது = 8.9 யூனிட்
பாஸ்பரஸ் = 4.62%
மருத்துவப் பயன்கள்
தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதில் தங்கச்சத்து இருப்பதால், 6 மாதம் பயன்படுத்தினால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.
கல்லீரல், மண்ணீரரை பலப்படுத்துவதுடன் செயல்பாட்டினையும் ஒழுங்குப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோயை குணமாக்குகிறது. மதுப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பினை குணப்படுத்துகிறது. அதிக காய்ச்சலினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, மண்ணீரல் வீக்கத்தினையும் சரி செய்கிறது
இரத்தசோகை
கரிசாலையில் அதிகமான இரும்புச்சத்து உள்ளதால் இரத்தத்தினை சுத்தப்படுத்தி செயல்பாட்டினை சீர்படுத்துகிறது அனிமியா என்று இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
வயிறு
குடல் புண், பித்தப்பை கற்கள், குடல் புழுக்கள், பித்தப்பை வீக்கம், மலச்சிக்கல் , வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் கரிசலாங்கண்ணியால் குணமாகும்.
சளிஇருமல்
சளி இருமல் உள்ளவர்களுக்கு கரிசாலையை உண்ணக்கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவை குணமடைகிறது. அதிக காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரிசாலை சாற்றைக்கொடுத்தால் காய்ச்சல் குணமாகும், நோய் எதிர்ப்புத்திறனும் கிடைக்கும். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் உடலில் உள்ள தாதுக்கள் பலப்படுத்துவதற்கும் கரிசாலங்கண்ணி உதவும்
கண்
கண் பார்வை தெளிவாகவும், கண்ணொளி பெருகவும் உதவும்.
தலைமுடி
தலையில் முடிகொட்டுவது, சொட்டையாவது போன்றவற்றை தடுக்கும், இள நரை வராமல் தடுக்கும்.
தோல்
கரிசாலை சாற்றை இதர மூலிகைகளுடன் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோல் நோய்கள், அறிப்பு, தோல் வெடிப்பு நீங்கும்.
இதையும் படிக்கலாம் : முருங்கை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!