முகத்தில் உபயோகிக்க கூடாத 7 பொருட்கள்

முகத்தில் ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களை கிட்டத்தட்ட இருபது வருடங்களாக உபயோகிக்கும் பழக்கம் நம் பெண்களிடம் இருந்து வருகிறது. அவ்வாறு உபயோகிக்கும் பொழுது முகத்தின் சருமத்தை பாதிக்கும் சில பொருட்களை தன்னையறியாமல் உபயோகித்து விடுகின்றனர். எந்த பொருட்களை முகத்தில் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வினிகர்

வினிகரிலும் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் அது முகத்தை பாதிக்கக் கூடும். எனவே வினிகரில், தண்ணீர் கலந்து அதை நீர்க்கச் செய்வதால், அதன் அமிலத்தன்மை குறையும். பின் அதை முகத்தில் உபயோகிப்பதே சரியான முறையாகும்.

பீர்

பீரிலும் அமிலத்தன்மை அமிலத்தன்மை இருப்பதால் இதை அடிக்கடி முகத்தில் உபயோகித்தால், முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை வறண்டு முகத்திற்கு வறட்சியான, பொலிவில்லாத தோற்றத்தை தரும். மேலும் இதனால் முகத்தில் பருக்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

பேகிங் சோடா

பேகிங் சோடாவை அதிகமாக முகத்தில் போடுவது ஆபத்தை விளைவிக்கும். பேகிங் சோடா காரத் தன்மை வாய்ந்தது.

சருமத்தின் PH அளவையும் அது காரத்தன்மை / ஆல்கலைன் மிக்கதாக்கி விடும். அதனால் முகம் பொலிவிழக்கும். மேலும் முகத்தில் பருக்கள் சிறு கட்டிகள் உண்டாகலாம்.

புதினா இலைகள்

புதினா இயற்கையான புத்துணர்வை அளிக்கக் கூடிய ஒரு இலை என்றாலும், அதில் உள்ள மென்தால் முகத்தில் சிவப்பு புள்ளிகள் மற்றும் பருக்களை தோற்றுவிக்கிறது. அடிக்கடி புதினா முகத்தில் போடுபவர்களுக்கு, சருமம் கருமை அடைவதாகவும் கூறப்படுகிறது.

பற்பசை

சில பற்பசைகளில், பலவகைப்பட்ட ரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் சருமத்தின் மெருகை அது குறைத்து விடும். மேலும் சருமத்தை பாதிக்கும். முகத்தில் அதிகப்படியாக பற்பசை உபயோகித்தால், அது முகத்தில் சுருக்கங்கள் உண்டாக செய்கிறது.

உடல் லோஷன்

உடல் லோஷன் என்பது உடலில் உபயோகிப்பதற்குத்தான் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது முகத்தில் உபயோகிப்பதற்கு அல்ல.

இந்த லோஷனில் பல வகையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அதை முகத்தில் போடும் பொழுது, அவை முகத்தின் மென்மையான சருமத்தை பாதிக்க்கும். முகத்திற்கென்று விற்கப்படும் பிரேத்யகமான முக க்ரீம்களை தான் முகத்தில் போட வேண்டும்.

வாசலின்

எண்ணெய் பசை மற்றும் ஒட்டும் பிசு பிசுப்பு தன்மை உடைய வாசலின் முகத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருள் அல்ல.

அதை முகத்தில் பயன்படுத்தினால் தூசி, அழுக்கு போன்றவை முகத்தில் ஒட்டிக் கொண்டு முக சரும துவாரங்களுக்கு மேல் மற்றொரு அடுக்கை உருவாக்கி விடும். இதனால் சரும துவாரங்கள் அடைப்பட்டு சருமம் பாதிப்படையும்.

நம்முடைய சருமம் எந்த வகையை சார்ந்தது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ற பொருகளை உபயோகிப்பதே சிறந்தது. அளவுக்கு அதிகமாக எதையுமே உபயோகிக்க கூடாது. அவ்வாறு செய்தால் சருமத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *