ராமர் 108 போற்றி துதியை தினமும் காலையில் உச்சரித்து வந்தால் நம்மிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும்.
- ஓம் அயோத்தி அரசே போற்றி
- ஓம் அருந்தவ பயனே போற்றி
- ஓம் அச்சுதானந்தகோவிந்த போற்றி
- ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி
- ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
- ஓம் அறத்தின் நாயகனே போற்றி
- ஓம் அன்பின் இதயம் உறைவோய் போற்றி
- ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
- ஓம் அழகு சீதாபதியே போற்றி
- ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
- ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி
- ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி
- ஓம் அற்புத நாமா போற்றி
- ஓம் அறிவுச்சுடரேபோற்றி
- ஓம் அளவிலா குணநிதியே போற்றி
- ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
- ஓம் அரக்கர் க்குகூற்றே போற்றி
- ஓம் அனுமன் அன்பனே போற்றி
- ஓம் அன்பு கொண்டாய் போற்றி
- ஓம் அனந்த கல்யாண குணா போற்றி
- ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி
- ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
- ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
- ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி
- ஓம் ஆத்மசொரூபனே போற்றி
- ஓம் ஆதிமூலமே போற்றி
- ஓம் இளையவன் அண்ணலே போற்றி
- ஓம் இன்சுவை மொழியே போற்றி
- ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
- ஓம் உண்மை வடிவமே போற்றி
- ஓம் உத்தம வடிவே போற்றி
- ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி
- ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி
- ஓம் ஊழி முதல்வா போற்றி
- ஓம் எழில் நாயகனே போற்றி
- ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி
- ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி
- ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
- ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
- ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
- ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
- ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
- ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி
- ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
- ஓம் கருப்பொருளே போற்றி
- ஓம் கரனை அழித்தோய் போற்றி
- ஓம் காமகோடி ரூபனே போற்றி
- ஓம் காமம் அழிப்பவனே போற்றி
- ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
- ஓம் காலத்தின் வடிவே போற்றி
- ஓம் காசி முக்தி நாமா போற்றி
- ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
- ஓம் கோசலை மைந்தா போற்றி
- ஓம் கோதண்ட பாணியே போற்றி
- ஓம் சங்கடம் தீர்க்கும்சத்குருவே போற்றி
- ஓம் சத்ய விக்ரமன் போற்றி
- ஓம் சரணாகத வத்சலா போற்றி
- ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி
- ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி
- ஓம் சோலை அழகனே போற்றி
- ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
- ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி
- ஓம் தியாகமூர்த்தியே போற்றி
- ஓம் நிலையானவனே போற்றி
- ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
- ஓம் நீலமேக சியாமளனே போற்றி
- ஓம் பங்கஜகண்ணனே போற்றி
- ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி
- ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி
- ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி
- ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி
- ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
- ஓம் பரதனின் அண்ணனே போற்றி
- ஓம் பாதுகை தந்தாய் போற்றி
- ஓம் பிறவி அறுப்பாய் போற்றி
- ஓம் மாசிலா மணியே போற்றி
- ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
- ஓம் மாதவச்செல்வமே போற்றி
- ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி
- ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி
- ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி
- ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
- ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி
- ஓம் ரகு வம்ச நாயகா போற்றி
- ஓம் லவகுசர் தந்தையே போற்றி
- ஓம் வல்லமை கொண்டாய் போற்றி
- ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி
- ஓம் வானரர் க்கு அருளாய் போற்றி
- ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி
- ஓம் விஷயம் கடந்தவனே போற்றி
- ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி
- ஓம் விஜயராகவனே போற்றி
- ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி
- ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி
- ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
- ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி
- ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி
- ஓம் வேத முதல்வா போற்றி
- ஓம் வேந்தர் வேந்தா போற்றி
- ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
- ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி
- ஓம் வேதாந்த சாரமே போற்றி
- ஓம் வைகுண்ட வாசா போற்றி
- ஓம் வைதேகி மணாளா போற்றி
- ஓம் வையகப் பிரபுவே போற்றி
- ஓம் வையகத்தை வாழவைப்பாய் போற்றி
- ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி
இதையும் படிக்கலாம் : சுதர்சன காயத்ரி மந்திரம்..!