மாலையில் விளக்கேற்றியதும் காளிதேவியை மனதில் எண்ணி இந்த 108 போற்றியை சொன்னால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதி முன்பு விளக்கேற்றியும் காளிதேவியின் 108 போற்றி பாடினால் இரட்டிப்பு பலம் கிடைக்கும். எண்ணியது கைகூடும்.
காளிதேவியின் 108 போற்றி
- ஓம் காளியே போற்றி
- ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
- ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
- ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
- ஓம் அகநாசினியே போற்றி
- ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
- ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
- ஓம் ஆதாரசக்தியே போற்றி
- ஆலகாலத் தோன்றலே போற்றி
- ஓம் இளங்காளியே போற்றி
- ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
- ஓம் இஷ்டதேவதையே போற்றி
- ஓம் இடர் களைபவளே போற்றி
- ஓம் ஈறிலாளே போற்றி
- ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
- ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
- ஓம் உக்ரகாளியே போற்றி
- ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
- ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
- ஓம் ஊழிசக்தியே போற்றி
- ஓம் எழுதலைக்காளியே போற்றி
- ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
- ஓம் ஓங்காரியே போற்றி
- ஓம் கருங்காளியே போற்றி
- ஓம் காருண்யதேவியே போற்றி
- ஓம் கபாலதாரியே போற்றி
- ஓம் கல்யாணியே போற்றி
- ஓம் காக்கும் அன்னையே போற்றி
- ஓம் காளராத்ரியே போற்றி
- ஓம் காலபத்னியே போற்றி
- ஓம் குங்குமகாளியே போற்றி
- ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
- ஓம் சமரில் வெல்பவளே போற்றி
- ஓம் சத்திய தேவதையே போற்றி
- ஓம் சம்ஹார காளியே போற்றி
- ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
- ஓம் சிம்ம வாகினியே போற்றி
- ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
- ஓம் சிவசக்தியே போற்றி
- ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
- ஓம் சுடலைக்காளியே போற்றி
- ஓம் சுந்தர மாகாளியே போற்றி
- ஓம் சூலம் கொண்டவளே போற்றி
- ஓம் செங்காளியே போற்றி
- ஓம் செல்வம் தருபவளே போற்றி
- ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
- ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
- ஓம் சோமகாளியே போற்றி
- ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
- ஓம் தனகாளியே போற்றி
- ஓம் தட்சிணகாளியே போற்றி
- ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
- ஓம் தாண்டவமாடினாய் போற்றி
- ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
- ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
- ஓம் தில்லைக்காளியே போற்றி
- ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
- ஓம் தீயவர் பகைவியே போற்றி
- ஓம் நல்லவர் துணைவியே போற்றி
- ஓம் நலன்கள் தருவாய் போற்றி
- ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
- ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
- ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
- ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
- ஓம் நாடாளும் தேவியே போற்றி
- ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
- ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
- ஓம் நித்தியகாளியே போற்றி
- ஓம் நிக்ரஹ காளியே போற்றி
- ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
- ஓம் பராசக்தி தாயே போற்றி
- ஓம் பஞ்சகாளியே போற்றி
- ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் பயங்கரவடிவே போற்றி
- ஓம் பத்ரகாளியே போற்றி
- ஓம் பாதாளகாளியே போற்றி
- ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
- ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
- ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
- ஓம் பூதகாளியே போற்றி
- ஓம் பூவாடைக்காரியே போற்றி
- ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
- ஓம் பெருங்கண்ணியே போற்றி
- ஓம் பேராற்றலே போற்றி
- ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
- ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
- ஓம் மதுரகாளியே போற்றி
- ஓம் மடப்புரத்தாளே போற்றி
- ஓம் மகாகாளியே போற்றி
- ஓம் மகாமாயையே போற்றி
- ஓம் மங்களரூபியே போற்றி
- ஓம் மந்திரத்தாயே போற்றி
- ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
- ஓம் மாற்றம் தருவாய் போற்றி
- ஓம் முக்கண்ணியே போற்றி
- ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
- ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
- ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் மோட்சம் தருவாய் போற்றி
- ஓம் வளம் தரும் தேவியே போற்றி
- ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
- ஓம் விரிசடையாளே போற்றி
- ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
- ஓம் வீரபத்ரகாளியே போற்றி
- ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
- ஓம் வெக்காளியே போற்றி
- ஓம் வேதனை களைவாய் போற்றி
- ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!
இதையும் படிக்கலாம் : துர்கை அம்மன் 108 போற்றி..!