இந்தியாவிலேயே தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுவது குலசையில் மட்டுமே.
தூத்துக்குடியில் உள்ள உடன்குடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்த குலசேகரன்பட்டினம் என்னும் ஊர் உள்ளது. இது மக்களால் குலசை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஞானமூர்த்தி சமேத ஸ்ரீ முத்தாரம்மனாக அம்பிகை வீற்றுருக்கிறாள்.
பாண்டிய மன்னர்கள் கடலினுள் இருந்து முத்துக்களை எடுத்து வந்து இந்த அம்மனுக்கு ஆபரணங்கள் அணிவித்ததால் முத்தாரம்மன் என்று பெயர் வந்தது எனவும், முத்து + ஆற்று+ அம்மன் அதாவது உடலில் முத்துக்களை போல வரும் அம்மை நோயை இந்த அம்மன் ஆற்றுவதால் முத்தாரம்மன் என பெயர் வந்தது எனவும் கூறுகின்றனர்.
மகிஷாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவி பத்து நாள் விரதமிருந்து பத்தாம் நாள் சூரசம்ஹராம் நடத்திய நிகழ்வை தசரா திருவிழாவாக கொண்டாடுவதாக வரலாறு கூறுகிறது.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்த கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். அதில் இருந்து பக்தர்கள் அனைவரும் காப்புக்கட்டி விரதம் இருப்பர். வேண்டுதல் இருப்போர் தங்கள் உருவங்களை மாற்றி அதாவது வேடமிட்டு வீதிகளில் அலைந்து அம்மனுக்கான காணிக்கையை பெறுவர்.
முத்தாரம்மன் 108 போற்றி
- ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அகிலாண்ட நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அருமையின் வரம்பே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அறம்வளர்க்கும் அம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அரசிளங் குமரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அப்பர்ணி மருந்தே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அமுத நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அருந்தவ நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அருள்நிறை அம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஆலவாய்க்கரசியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஆதியின் பாதியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஆலால சுந்தரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஆனந்த வல்லியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான இளவஞ்சிக் கொடியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான இமயத் தரசியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான இடபத்தோன் துணையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஈசுவரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான உயிர் ஒவியமே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான எண்திசையும் வென்றாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஏகன் துணையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஐங்கரன் அன்னையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஒப்பில்லா அமுதே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஓங்காரசுந்தரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கற்றோருக்கு இனியோய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான கல்லார்க்கு எளியோய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான கடம்பவன சுந்தரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கல்யாண சுந்தரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கனகமணிக்குன்றே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கற்பின் அரசியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கருணை யூற்றே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கல்விக்கு வித்தே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கனகாம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கதிரொளிச்சுடரே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கற்களை கடந்த கற்பகமே போற்றி
- ஓம் ஸ்ரீஞான காட்சிக்கிளியோய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான காலம் வென்ற கற்பகமே போற்றி
- ஓம் ஸ்ரீஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான முத்தாரம்மா அம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான குலச்சிறை காத்தோய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கூடற்கலாப மயிலே போற்றி
- ஓம் ஸ்ரீஞான கோலப் பசுங்கிளியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சக்திவடிவே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சங்கம் வளர்த்தாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான சிவகாம சுந்தரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான சிவயோக நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சிவானந்த வல்லியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சிங்கார வல்லியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான செந்தமிழ் தாயே போற்றி
- ஓம் ஸ்ரீஞான செல்வத்துக் கரசியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சேனைத் தலைவியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சொக்கர் நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஞானாம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஞானப்பூங்கோதையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான தமிழர் குலச்சுடரே போற்றி
- ஓம் ஸ்ரீஞான திருவுடையம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான திரிபுர சுந்தரியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான திருநிலை நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான தீந்ர்தமிழ்ச் சுவையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
- ஓம் ஸ்ரீஞான தென்னவன் செல்வியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான தேன்மொழியம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான தையல் நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான நற்கனியின் சுவையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான நற்றவத்தின் கொழுந்தே போற்றி
- ஓம் ஸ்ரீஞான நல்ல நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான நீலாம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான நீதிக்கரசியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பக்தர்தம் திலகமே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பழமறையின் குருந்தே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பரமானந்த பெருக்கே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பண்மைதைந்த பெருக்கே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பவளவாய்கிளியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பசுபதி நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பாகம் பிரியா அம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான ஞான பாண்டியா தேவியின் தேவி போற்றி
- ஓம் ஸ்ரீஞான பார்வதி அம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான பெரிய நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பொன்மயிலம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான பொற்கொடி அன்னையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மங்கள நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மழலைக்கிளியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மனோன்மயித்தாயே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மண்சுமந்தோண் மாணிக்கமே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மாயோன் தங்கையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மாணிக்க வல்லியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மீனவர்கோன் மகளே போற்றி
- ஓம் ஸ்ரீஞான மீனாட்சியம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான முழுஞானப் பெறுக்கே போற்றி
- ஓம் ஸ்ரீஞான முக்கண் சுடர்விருந்தே போற்றி
- ஓம் ஸ்ரீஞான யாழ்மொழி யம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான வடிவழ கம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான வேதநாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீஞான சவுந்தராம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி
- ஓம் ஸ்ரீஞான அம்மையே அம்பிகையே போற்றி
- ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
- ஓம் ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மனே போற்றி! போற்றி!! போற்றி!!!
இதையும் படிக்கலாம் : அனைத்து தெய்வங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள்..!