ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சாய்பாபா 108 போற்றிகளை நாம் துதித்து அவரின் பரிபூரண அருளை பெறுவோம்.
சாய்பாபா 108 போற்றி
- ஓம் சாயிநாதனே போற்றி
- ஓம் சீரடி உறைந்தவனே போற்றி
- ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி
- ஓம் அன்பு வடிவானவனே போற்றி
- ஓம் அறிவுறுத்துபவனே போற்றி
- ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி
- ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி
- ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி
- ஓம் உலகைக் காப்பவனே போற்றி
- ஓம் உவகை தருபவனே போற்றி
- ஓம் உளமதை அறிபவனே போற்றி
- ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி
- ஓம் விட்டலின் வடிவே போற்றி
- ஓம் சுவாமியே போற்றி
- ஓம் அப்பனே போற்றி
- ஓம் பாபா போற்றி
- ஓம் பாதமலரோன் போற்றி
- ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி
- ஓம் அறத்தை போதித்தவனே போற்றி
- ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி
- ஓம் ராமானந்த சீடனே போற்றி
- ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி
- ஓம் வேதம் புரிந்தவனே போற்றி
- ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி
- ஓம் அபயம் தருபவனே போற்றி
- ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி
- ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி
- ஓம் நற்குணனே போற்றி
- ஓம் விற்பபன்னனே போற்றி
- ஓம் பொற்பாதனே போற்றி
- ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி
- ஓம் மகத்துவமானவனே போற்றி
- ஓம் மங்கள ரூபனே போற்றி
- ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி
- ஓம் நீதியை புகட்டினன் போற்றி
- ஓம் கொடைக் குணத்தோனே போற்றி
- ஓம் நிறை குணத்தோனே போற்றி
- ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
- ஓம் மறை அறிந்தவனே போற்றி
- ஓம் மாண்பு பொருந்தினை போற்றி
- ஓம் மாதவத்தோனே போற்றி
- ஓம் அபயக் கரத்தோனே போற்றி
- ஓம் அமரர்க்கோனே போற்றி
- ஓம் அகம் உறைபவனே போற்றி
- ஓம் அசகாய சூரனே போற்றி
- ஓம் அசுர நாசகனே போற்றி
- ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி
- ஓம் அணுவணுவானவனே போற்றி
- ஓம் அமுத விழியோனே போற்றி
- ஓம் அரங்க நாயகனே போற்றி
- ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி
- ஓம் அருவமானவனே போற்றி
- ஓம் ஆதாரமானவனே போற்றி
- ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
- ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
- ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
- ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
- ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி
- ஓம் இச்சா சக்தியே போற்றி
- ஓம் கிரியா சக்தியே போற்றி
- ஓம் ஞான சக்தியே போற்றி
- ஓம் இமையவனே போற்றி
- ஓம் இங்கித குணத்தினனே போற்றி
- ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
- ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
- ஓம் இருள் நீக்குவோனே போற்றி
- ஓம் ஈகை கொண்டவனே போற்றி
- ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
- ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
- ஓம் உலகைக் காப்பவனே போற்றி
- ஓம் உமாமகேசுவரனே போற்றி
- ஓம் உயிராய் நிற்பவனே போற்றி
- ஓம் உவகை அளிப்பவனே போற்றி
- ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி
- ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
- ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி
- ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி
- ஓம் ஐயம் களைபவனே போற்றி
- ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
- ஓம் ஓங்கார ரூபனே போற்றி
- ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி
- ஓம் ஓளடதமானவனே போற்றி
- ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி
- ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி
- ஓம் சுத்த ஆனந்தனே போற்றி
- ஓம் சூதறுப்பவனே போற்றி
- ஓம் சூனியம் களைபவனே போற்றி
- ஓம் செம்மலரடியோனே போற்றி
- ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி
- ஓம் ஞானச் சுடரொளியே போற்றி
- ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் சச்சிதானந்தனே போற்றி
- ஓம் பண்பின் வடிவானவனே போற்றி
- ஓம் பலம் அருள்வோனே போற்றி
- ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி
- ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி
- ஓம் நன்மைகள் தருபவனே போற்றி
- ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி
- ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி
- ஓம் அன்னை வடிவினனே போற்றி
- ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி
- ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி
- ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி
- ஓம் மகாயோகியே போற்றி
- ஓம் மகத்துவமானவனே போற்றி
- ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி
- ஓம் நிர்மல வடிவினனே போற்றி போற்றி