விநாயகர் சதுர்த்தி விழாவை இந்தியாவில் பல மாநிலங்களில் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கு பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். நாம் எப்படி வணங்கினாலும், நம் வேண்டுதலைக் கேட்டு ஆசி வழங்கக் கூடியவர் நாம் வணங்கும் விநாயகர்.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் கொழுக்கட்டை, இனிப்புகள் வைத்து பூஜைகள் செய்து வழிபடவேண்டும், பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
மஹா கணபதி மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹிரீம் க்லீம் க்ளவும் கம் கன் கணபதியே
வரவரத சர்வ ஜன மே வசமாயன ஸ்வாகா!”
இந்த மஹா கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை சொன்னால் எல்லா நன்மைகளும் கிட்டும்.
விநாயகர் ஸ்லோகம்
“கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்”
இதுதவிர விநாயகர் சதுர்த்தியின் பொது 108 விநாயகர் மந்திரத்தை உச்சரித்தால் மேலும் பல நன்மைகள் கைகூடி வரும்.
இதையும் படிக்கலாம் : முக்கிய விநாயகர் திருத்தலங்களும் அதன் சிறப்புக்களும்