மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் உடலுக்கு வலுவை தரும். இதன் தனி சிறப்பே ஆண்மையை பலப்படுத்தும்.  மாப்பிள்ளை சம்பா பெயருக்கு ஏற்றார் போல் மாப்பிளைக்கு அதாவது புதுமாப்பிளைக்கு தேவைப்படும் அரிசி.

நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் கார்போ ஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நமது முன்னோர்கள் இத்தகைய அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பாரம்பரிய அரிசி வகைகளை சமைத்து சாப்பிட்டதால் தான் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ்ந்தனர்.

பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே 20 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. இதில் ஏகப்பட்ட நெல் ரகங்கள் அழிந்துவிட்டன. 200 வகையான நெல் ரகங்களை மீட்டுவிட்டார்கள். நெல் ரகங்களை மட்டுமே தற்போது மீட்டுள்ளனர். பாரம்பரிய அரிசி வகைகளில் நிறைய ரகங்கள் இருக்கிறது. தற்சமயம் சீரக சம்பா, காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா போன்றவற்றை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பாரம்பரிய அரிசி வகைகளில் ஒவ்வொரு அரிசியிலும் சத்துக்கள் மட்டுமின்றி நோயை தீர்க்கும் ஆற்றலும் உண்டு. இத்தகைய அரிசியை உணவாக சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். பாரம்பரிய அரிசிகளில் முக்கியமானது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி. திருவண்ணாமலையில் இந்த அரிசி விளைகிறது.

இந்த அரிசியை சாப்பிட்டால் உடலுக்கு வலுவை தரும். இதன் சிறப்பே ஆண்மையை பலப்படுத்தும்.  மாப்பிள்ளை சம்பா பெயருக்கு ஏற்றார் போல் மாப்பிளைக்கு அதாவது புதுமாப்பிளைக்கு தேவைப்படும் அரிசி.

மாப்பிள்ளை சம்பாவில் இருக்கும் சத்துகள்

  • புரதம்
  • நார்ச்சத்து
  • இரும்புச்சத்து
  • துத்தநாக சத்துகள்

மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி

  • மாப்பிள்ளை சம்பா நெல் ஜூலை முதல் ஜனவரி வரையிலும், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. இந்த நெல் களிமண் மற்றும் மணல் கலந்த களிமண் போன்ற நிலங்களில் வளர்கிறது.
  • இந்த நெல் அறுவடை காலம் 160 நாட்கள். இந்த நெல் 120 செமீ உயரத்திற்கு வளர்கிறது.
  • பாரம்பரிய நெல் பயிருக்கு உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இது இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற பயிராக இருக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இந்த அரிசி உணவை தினசரி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாதாரண காய்ச்சல், தலைவலியை சரியாக்கி பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். இது உடல் சோர்வை நீக்குகிறது, நரம்புகளுக்கு ஆற்றலை அளிக்கிறது.

மாப்பிள்ளை சம்பாவில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து புற்றுநோய் வராமல் தடுக்கும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் கரைப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதய நோய் தடுக்கக்கூடியது.

ஆண்மை குறைபாடு நீங்க

இன்றைய நவீன வாழ்க்கைமுறை துரித உணவு பழக்கத்தினால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் மாப்பிளை சம்பா அரிசியால் செய்த உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலத்தை கொடுக்கும். ஆண்மை குறைபாடு சரியாகும்.

பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி இந்த மாப்பிளை சம்பாக்கு உண்டு.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் நீக்கிய வெள்ளை அரிசியை விட மாப்பிள்ளை சம்பா அரிசி சிறந்தது.

இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, நரம்புகளை வலுவாக்கும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர் இந்த அரிசியை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

நார்ச்சத்து நிறைந்த இந்த அரிசியை சமைத்தால் எளிதில் ஜீரணமாகும். வயிறு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப் புண்கள் குணமாகும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி உணவுகள்

  • அரிசியில் சமைத்த சாதம்
  • அரிசி கஞ்சி
  • இட்லி, தோசை மாவு
  • புட்டு
  • கொழுக்கட்டை
  • சாதம் வடித்த கஞ்சி

மாப்பிள்ளை சம்பா அரிசி சமைப்பது எப்படி

சாதம்

இந்த அரிசியை குறைத்தது 6 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஸ்டீம் இல்லாமல் வேக வைக்க வேண்டும். அடிக்கடி கிளறி, தண்ணீர் நன்கு சுண்டியதும் சாதம் தயாராகிவிடும்.

கஞ்சி

6 மணி நேரம் ஊறய அரிசியை மிக்சியில் கோரா கோரா என்று அரைத்து அதில் பூண்டு 5 பல், சிறிது சீரகம், 8 வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்,உப்பு  சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்த கஞ்சி நல்ல ருசியாக இருக்கும்.

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிப்பதே இதன் முக்கிய சிறப்பே. ஆண், பெண் இருவருக்கும் உடலுக்கு தேவையான சத்துக்கள் மாப்பிளை சம்பாவில் அதிகமாக இருக்கு.

இதையும் படிக்கலாம் : பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் பயன்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *