கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்தால் நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
கீரைகளும் அதன் அற்புத பயன்களும்
காசினிக்கீரை
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது; உடல் சூட்டை குறைக்கிறது. காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி உள்ளன. இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும்.
இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும் மூலச்சுட்டை தணிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அதனால் உடலுக்கு நல்லது.
மஞ்சள் கரிசாலை
கல்லீரலை பலப்படுத்துகிறது; மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. இதன் முழு தாவரமும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலையைப் போக்க, பச்சை கரிசலாங்கண்ணி இலையைக் கழுவி, விழுதாக அரைத்து, ஒரு டம்ளர் மோர் கலந்து உள்ளுக்குள் உட்கொள்ள வேண்டும்.
புதினா
இரத்தத்தை சுத்திகரிக்கும்; அஜீரணத்தை போக்கும். புதினாக் கீரை ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை, வாத நோய், வறட்டு இருமல், ஆஸ்துமா மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கும் புதினா இலைகள் சிறந்த மருந்தாகும்.
பசலைக்கீரை
பசலைக்கீரை தசைகளை வலுவாக்கும். இந்த கீரை மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும். கால் மூட்டுகளில் ஏற்படும் வாத நோயைப் போக்கும். கீரை சாறு முகப்பருவை நீக்கும்.
வல்லாரைக் கீரை
வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. மூளையை பலப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் உதவுகிறது.
முளைக்கீரை
முளைக்கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த வகை கீரை குறிப்பாக கால்சியம் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பசியை தூண்டும், நரம்புகள் வலுவடையும்.
இதையும் படிக்கலாம் : தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்