புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பல வகைகள் இருக்கின்றன. புடலங்காயின் சிறப்பே குடல் புண் மற்றும் தொண்டை புண்ணை ஆற்ற கூடியவை.
புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமா இருக்கதனால உடல்ல உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக இது வெளியேற்றுகிறது.
புடலங்காயில் உள்ள சத்துக்கள்
புடலங்காயில் வைட்டமின் ஏ, பி,சி மற்றும் கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற பல சத்துக்கள் நிறைந்திருக்கு.
புடலங்காய் நன்மைகள்
புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதனால நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் புடலங்காயை அடிக்கடி உணவுல சேர்த்துகிறது உடம்புக்கு ரொம்ப நல்லது.
புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு ஆற்றும்.
புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு தலையில் உள்ள பொடுகையும் சரி செய்யும்.
புடலங்காய் இலைச்சார கொஞ்சமா எடுத்து அந்த தண்ணியோட கொத்தமல்லியை சேர்த்து நல்லா கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தினமும் 3 வேளை குடிச்சு வந்தோம்னா மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணப்படுத்தும்.
இதையும் படிக்கலாம் : மாரடைப்பு வராம தடுக்க ஸ்வீட் கார்ன் சாப்பிடுங்க!