கற்றாழை பலவழிகளில் உடலுக்கு நன்மை செய்கிறது. இந்த சோற்றுக்கற்றாழை இளம்பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் பல பயன்களை தருகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை இந்த கற்றாழைக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே கற்றாழையை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்த்து கொள்வது பெண்களுக்கு பலன்தரும்.
சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் B, C சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடல் எடை குறைய
தினமும், வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடிப்பதால், உடல் எடை குறையும். உடல் சூடு இருப்பவர்கள், கற்றாழை சாறுடன், எலுமிச்சம் சாறு, சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். குடல்புண்ணும் ஆறும். நீர்க்கடுப்பு, வயிறு எரிச்சல்களும் தணியும்.
சரும பாதுகாப்புக்கு
இந்த கற்றாழை சரும பாதுகாப்புக்கு உதவுவதால், கற்றாழையை மூலப்பொருட்களாக வைத்து ஃபேஸ் கிரீம்கள், சோப்புகள், ஷாம்ப்பு தயாரிக்கின்றனர்.
கற்றாழையுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால், மங்கு, பருக்கள், தழும்புகள், சுருக்கங்கள், நீங்கி சருமம் பொலிவாகும்.
கற்றாழையுடன் வெள்ளரிக்காய் சாறு, தயிர், ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேக் போல தடவினால் கருவளையம், கழுத்து பின்பக்கம் படர்ந்துள்ள கருமை நீங்கும்.
கர்ப்பப்பை பிரச்சனை
சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனையை இந்த கற்றாழை எளிதாக தீர்க்கிறது.
வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் மருத்துவ குணம் அதிகம். இவைகளை பயன்படுத்துவது சிறந்தது.
கற்றாழையுடன் தேன் சேர்த்து, ஜூஸாக அரைத்து குடித்தால், பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும். இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்தும்.
மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலியை குறைப்பதற்காக, கற்றாழை சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
கர்ப்பிணிகளின் உடற்சூட்டை தணிக்கவும், சுகப்பிரசவத்தை தூண்டவும் உதவும். இந்த கற்றாழையின் வேர்கள் தாம்பத்திய உறவு சிறக்க பயன்படுத்த படுகின்றன.
முக்கிய குறிப்பு
சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இளந்தாய்மார்கள், அலர்ஜி உடையவர்கள் டாக்டரிடம் ஆலோசித்துவிட்டே இந்த கற்றாழை ஜூஸை பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிக்கலாம் : நீர்க்கட்டி பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம்..!