தினமும் சூரிய பகவான் 108 போற்றியை சொல்வதால் வாழ்வில் செல்வ செழிப்போடும், மன நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும், வாழ அருள் புரிவார்.
சூரிய பகவான் 108 போற்றி
ஓம் அதிதி புத்திரனே போற்றி
ஓம் அளப்பதற்கு அரியனே போற்றி
ஓம் அரசாளச் செய்பவனே போற்றி
ஓம் அர்க்க வனத்தானே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி பிழம்பே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆதி தெய்வமே போற்றி
ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் `ஆன்ம தத்துவமே போற்றி
ஓம் ஆதித்ய ஹ்ருதயமே போற்றி
ஓம் ஆதித்ய பகவானே போற்றி
ஓம் ஆரோக்கியம் தருவாய் போற்றி
ஓம் இருள் நீக்குபவனே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிர மூர்த்தியே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரி தேரோனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் உள்ளம் அமர்வாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிவடிவானவனே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஓராழித் தேரோனே போற்றி
ஓம் ஓய்வில்லாதவனே போற்றி
ஓம் ஓங்காரம் துதிப்பவனே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கண் கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கம் இல்லாதவனே போற்றி
ஓம் கமல மலர் ஏற்பவனே போற்றி
ஓம் கர்ணனின் தந்தையே போற்றி
ஓம் கனலாகக் காய்பவனே போற்றி
ஓம் கண்ணின் மணியே போற்றி
ஓம் கற்பரசி சேவகனே போற்றி
ஓம் கண்டியூர் வாழ்பவனே போற்றி
ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்சின வேந்தனே போற்றி
ஓம் காலை உதிப்பவனே போற்றி
ஓம் கார்த்திகை அதிபதியே போற்றி
ஓம் கீழ்த்திசையோனே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கு அருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமை பிரியனே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் செஞ்சுடர் ஞாயிறே போற்றி
ஓம் சனீஸ்வரர் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சி தெய்வமே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சித்திரை நாயகனே போற்றி
ஓம் சிம்ம ராசிநாதனே போற்றி
ஓம் சிரஞ்சீவியானவனே போற்றி
ஓம் சுட்டெரிப்பவனே போற்றி
ஓம் சுயம் பிரகாசனே போற்றி
ஓம் நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சவுரமத நாயகனே போற்றி
ஓம் சூரியனார்கோவில் அமர்ந்தாய் போற்றி
ஓம் செம்மேனிப் பெம்மானே போற்றி
ஓம் செம்மலர் பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையோனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதம் தாங்கியவனே போற்றி
ஓம் சோழர் குல தெய்வமே போற்றி
ஓம் தந்தையாக திகழ்பவனே போற்றி
ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தேகநலம் தருபவனே போற்றி
ஓம் நடுநாயகம் ஆனவனே போற்றி
ஓம் நன்னிலம் அருள்பவனே போற்றி
ஓம் நலம் தருபவனே போற்றி
ஓம் நளாயினிக்கு அருள்பவனேபோற்றி
ஓம் நிகரில்லாத தலைவா போற்றி
ஓம் நீதியைக் காப்பாய் போற்றி
ஓம் நெருப்பின் வடிவே போற்றி
ஓம் நோய் தீர்ப்பாய் போற்றி
ஓம் பகல் காரணனே போற்றி
ஓம் பரஞ்சோதியானாய் போற்றி
ஓம் பாவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் பாலைநில தேவா போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
ஓம் புகழ் மிக்கவனே போற்றி
ஓம் புத்தி அளிப்பவனே போற்றி
ஓம் புத்தொளி சுடரே போற்றி
ஓம் மதிஒளி ஆனாய் போற்றி
ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் மார்த்தாண்டனே போற்றி
ஓம் முழுமுதல் பொருளே போற்றி
ஓம் முக்கோண கோலனே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவி குலத் தலைவனே போற்றி
ஓம் விடியலின் காரணமே போற்றி
ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
ஓம் வானவர் தலைவா போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
இதையும் படிக்கலாம் : 108 நவகிரக போற்றி