தலைமுடி அக்கு அக்கா கொட்டுதா 4 இலை போதுமே..!!

தலைமுடி வளர்ச்சிக்கு செயற்கை மருந்துகளுக்குப் பதிலாக இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தினால் போதும். நம் வீட்டில் காய்ச்சி பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களைப் பற்றி பார்ப்போம்.

தலைமுடி கொட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் உணவுக்கும் முடிக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதால் உணவு விசியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். பொதுமான அளவு தண்ணீர் மற்றும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை சாப்பிடவேண்டும். மேலும் தலைமுடியை பராமரிக்க எண்ணெய் பயன்படுத்தலாம்.

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி, கரிசலாங்கண்ணி போன்ற இலைகளைச் சேர்க்கவும். வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவற்றையும் சேர்த்து கலக்க வேண்டும்

இந்த கலவையில், கற்றாழையின் ஜெல் , சின்ன வெங்காயம், நெல்லிக்காய் இவற்றை இடித்து சேர்க்க வேண்டும். இதை நன்றாக காய்ச்சிய பின் இந்த எண்ணெய்யை ஒரு நாள் முழுவதும் அதே அப்படியா வைத்து விட்டு, மறுநாள் எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூவை அரைத்து காயவைத்து பின் தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து தலையில் தடவி குளித்தால் நல்ல பலன் தரும்.

பொன்னாங்கண்ணி

பாத்திரத்தில் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி, இந்த 4 இலைகளுடன் வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு தேங்காய் பால் + தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தலாம்.

இதற்கு மாற்றாக அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயம் போன்ற இந்த 4 பச்சைக் கீரைகளையும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, விழுதை ஊற்றி கொதிக்கவிடவும். ஒரு நாள் விட்டு, வடிகட்டி, மறுநாள் தலைமுடியில் தடவவும்.

செம்பருத்தி

செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை கழுவி, அரைத்து தண்ணீர் நீக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சிறிது சூடாக்கி, அதில் இந்த செம்பருத்தி விழுதை ஊற்றவும். இந்த எண்ணெயை வடிகட்டி உபயோகிக்கலாம்.

நொச்சி இலை

நொச்சி இலைகளை இடித்து சாறு தனியாக எடுக்க வேண்டும். அதை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சவும். பிறகு இந்த எண்ணெய் கலவையை தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால், முடி உதிர்வது நின்று, முடி வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாம் : முடி உதிர்வை கட்டுப்படுத்தும் உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *