நவராத்திரியின் 10-ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாள்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
விஜயதசமி கல்விக்கு உகந்த நாள். இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல் முதலாக எழுத்தறிவிக்கப்படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு வித்யாரம்பம் என்று பெயர். புதிய தொழில்கள் தொடங்குவது, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் உகந்த நாள் இந்தத் தினம். இந்த நாளில் அவரவர் தங்களின் குரு மற்றும் ஆசிரியரைச் சந்தித்து ஆசிபெறுவது மிகவும் சிறப்பு.
பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங்களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
ஸ்லோகம்
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்
இதையும் படிக்கலாம் : சகலகலாவல்லி மாலை பாடல்