நொச்சி செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
Contents
நொச்சி இலைகளின் அற்புத பயன்கள்..!
- நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு வைத்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும். இந்த இலையின் சாற்றை நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி, அந்த எண்ணெய்யை தலைக்கு தடவி வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் நரம்பு கோளாறு, கழுத்து வலியும் நீங்கும்
- சுவாசப்பாதையை சீராக்குவதில் இந்த இலைகளுக்குமுக்கிய பங்கு வகிக்கிறது. சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை போன்ற பிரச்சனைகளை இந்த இலை சரிசெய்கிறது.
- நொச்சி இலையுடன் கற்பூரவல்லி இலை சேர்த்து ஆவி பிடித்தால் சளி பிரச்சனை சரியாகிவிடும். இந்த இலை எரித்த புகையை சுவாசிப்பதால் தலைவலியும், தலைபாரமும் குணமாகும்.
- நொச்சி இலையுடன் வேப்பிலை சேர்த்து எரித்து புகைபோட்டால் கொசுக்களும், சிறுபூச்சிகளும் ஓடிவிடும். வயிற்றுப்புழுக்களை அழிக்கும். மேலும் பாம்பின் விஷத்தையும் முறிக்கும்.
- நொச்சி இலை சாறை முகத்தில் தடவுவதால் தேமல்கள், பருக்கள் அல்லது கொப்புளங்களை சரிசெய்கிறது.
- இந்த இலை உடல் வலி, தசைவலியை சரிசெய்கிறது. உடல் அசதி நீங்க 2 கைப்பிடி நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரிலே குளிக்கலாம்.
- மூட்டுவலி, இடுப்பு வலி சரியாக நொச்சி இலை சாற்றுடன், 1 கிராம் மிளகுத்தூள், நெய் கலந்த கலவையை தினமும் 2 வேளை சாப்பிடவேண்டும்.
- உடலில் வீக்கங்கள், புண்கள் சரியாக இந்த இலையை அரைத்து பூசினால் குணமாகிவிடும்.
- கை, கால் முட்டி வலிக்கு நொச்சி இலையை கசக்கி துணியில் வைத்து கட்டினால் வலிகள் குறையும்.
- தூக்கம் குறைபாடால் அவதிப்படுபவர்கள் தலையணை உறையில் நொச்சி இலையை வைத்து படுத்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்..!