குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்தால் மட்டும் போதாது. குளிப்பதற்கும் குளித்த பின் துடைப்பதற்கும் சில முறைகளை பின்பற்ற வேண்டும்.
நாம் குளிக்கும் போது, எடுத்தவுடன் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடாது. முதலில் கால்களிலும், பின்னர் உடலிலும், இறுதியாக தலையிலும் தண்ணீரை ஊற்றவும். வருடத்திற்கு ஒரு முறையாவது கடல் நீரில் குளிப்பது நன்மை தரும் என்பது ஐதீகம், அதனால் தான் முன்னோர்கள் அமாவாசையின் போது புனித நீராடினார்கள்.
நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டுவதால், அங்கு மூதேவி வந்து அமர்ந்தால், நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே, முதலில் முதுகை துடைக்க வேண்டும். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள். நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, முகம் தெளிவாகவும், சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும்.
தினமும் எப்படி குளிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தால் போதும். ஆனால் அடிக்கடி குளிக்க வேண்டும். நீங்கள் உடல் ரீதியாக குளிக்க முடியவில்லை என்றால், ஸ்பான்ஞ் குளியல் பயன்படுத்த முடியும். முகம், அக்குள் மற்றும் இடுப்பை ஈரமான துணியால் துடைக்கவும். –
வெந்நீரில் குளிக்கவே கூடாது. வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். 5-10 நிமிடங்கள் மட்டும் குளித்தால் போதும்.
உடலை சுத்தம் செய்ய லேசான சோப்பு அல்லது க்ளீன்சர் பயன்படுத்தவும். நறுமணம் மிகுந்த சோப்புகள் மற்றும் க்ளீன்சர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம்.
உடலை உலர்த்தும் போது துண்டு கொண்டு தீவிரமாக தேய்க்க வேண்டாம். மாறாக, மெதுவாக துடைக்கவும். குளித்த பிறகு எப்போதும் சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிக்கலாம் : குளிக்கும்போது 3 உறுப்புகளை கண்டிப்பா சுத்தம் செய்யணு