ஆரோக்கியமான மற்றும் நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம். சுறுசுறுப்பாக இருப்பதும் முக்கியம். நல்ல ஆரோக்கியம் நமக்கு மகிழ்ச்சியையும் பெரும் நிறைவையும் தருகிறது.
ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டியவை
- 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும். பொதுவாக கோடை காலத்திலும் கட்டாயம் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்தாக வேண்டும்.
- காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் மலம் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். - காலை, மாலை இருவேளை குளிக்க வேண்டும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதுமானது.
- ஊறவைத்த வெந்தயத்தை சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் என்று வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவேண்டும். இதனால் சர்க்கரையும், இரத்தக் கொதிப்பும் வராமல் தடுக்கப்படும். வந்தாலும் கட்டுக்குள் இருக்கும்.
- காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். உணவை நன்றாக மென்று, பொறுமையாக சாப்பிடுங்கள்.
- மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது. சாப்பிட்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு சாப்பிட்டகூடாது.
- சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு புற்றுநோயை உருவாக்கும்.
- மைதாவில் செய்த பரோட்டா சாப்பிடக்கூடாது இவை வாழ்நாளைக் குறைக்கும். குளிர்பானம், பாக்கெட் தின்பண்டங்களை சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு நல்லது.
- பிராய்லர் கோழிக்கறி தவிர்த்து மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது அருந்துதல், புகைபிடித்தல் கூடவே கூடாது.
- பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் இவற்றை நாள்தோறும்சாப்பிட வேண்டும்.
- உள்ளாடைகளை கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும். உள்ளாடை ஒரு நாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள். துவைக்காமல் திரும்பவும் பயன்படுத்த கூடாது.
இதையும் படிக்கலாம் : தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!