பந்தளபாலா ஐயப்பா
பரமதயாளா ஐயப்பா
பரமபவித்ரனே ஐயப்பா
பக்தருக்கருள்வாய் ஐயப்பா!
நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில்
எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா!
ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே
ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா!.
பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து
பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா!
சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே
சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா!
இதையும் படிக்கலாம் : ஹரிவராசனம் பாடல் வரிகள்