கருந்துளசி சிறப்பு மிக்கது. இரும்புக் கரண்டியால் துளசி சாற்றைக் கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க கபக்கட்டு, காய்ச்சல் போன்றவை குணமாகும்.
நாய்த்துளசியில் சளி நீக்கும் தன்மையும் உள்ளது. தொண்டை வலி மற்றும் வலியை நீக்கும்
துளசி இலைகளை பச்சையாக மென்று சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சளி, தொண்டை வலி போன்றவை குணமாகும்.
மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. 10 துளசி இலைகளை எடுத்து, 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து, அரை கப் கொதிக்க வைத்து, சூடாகக் குடித்து, பிறகு சிறிது எலுமிச்சைச் சாறு குடித்து, உடல் முழுவதும் நல்ல கம்பளி கொண்டு போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.
இதையும் படிக்கலாம் : துளசியை எப்படி பயன்படுத்துவது?