தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதி உள்ளது. முதல் தொகுதி திருவள்ளூர் ஆகும். 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவான மக்களவை தொகுதியாகும்.
முன்னர் 1951 முதல் 1962 வரை மூன்று தேர்தல்கள் இந்த தொகுதியில் நடைபெற்றது. இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தொகுதிகள்
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- கும்மிடிப்பூண்டி
- பொன்னேரி (தனி)
- திருவள்ளூர்
- பூந்தமல்லி (தனி)
- ஆவடி
- மாதவரம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
8,52,275 | 8,49,577 | 262 | 17,02,114 |
17 ஆவது
(2019) |
9,61,864 | 9,84,032 | 346 | 19,46,242 |
18 ஆவது
(2024) |
10,24,149 | 10,61,457 | 385 | 20,85,991 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | இந்திய தேசிய காங்கிரசு | மரகதம் சந்திரசேகர் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | வி. கோவிந்தசாமி நாயுடு |
2009 | அதிமுக | பொ. வேணுகோபால் |
2014 | அதிமுக | பொ. வேணுகோபால் |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | கே. ஜெயக்குமார் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | சசிகாந்த் செந்தில் |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் பொன். வேணுகோபால் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
அதிமுக | பொ. வேணுகோபால் | 3,68,294 |
திமுக | காயத்திரி | 3,36,621 |
தேமுதிக | சுரேஷ் | 1,10,452 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் பொன். வேணுகோபால் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | கூட்டணி | பெற்ற வாக்குகள் |
அதிமுக | பொ. வேணுகோபால் | அதிமுக | 6,28,499 |
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | து. இரவிக்குமார் | திமுக | 3,05,069 |
தேமுதிக | வி. யுவராஜ் | பாஜக | 2,04,734 |
17வது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கே. ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | கே. ஜெயக்குமார் | 7,67,292 |
அதிமுக | பொ. வேணுகோபால் | 4,10,337 |
மக்கள் நீதி மய்யம் | எம். லோகரெங்கன் | 73,731 |
18வது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | சசிகாந்த் செந்தில் | 7,96,956 |
பாஜக | பாலகணபதி | 2,24,801 |
தேமுதிக | கே. நல்லதம்பி | 2,23,904 |
இதையும் படிக்கலாம் : வட சென்னை மக்களவைத் தொகுதி..!