பஞ்சபூதங்களின் மொத்த வடிவமே விநாயகப் பெருமான்.
அவரது உடலின் ஒவ்வொரு பகுதியும் கம்பீரமான சக்தியை வெளிப்படுத்துகிறது.
ஐம்பெரும் சக்திகள் நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம்.
நம் முன்னோர்கள் இந்த பஞ்சபூதங்களை வணங்கினர், ஏனென்றால் அவை மனிதர்களால் அடக்க முடியாத சக்தி வாய்ந்தவை.
ஐம்பெரும் சக்திகளைக் கொண்ட விநாயகர்
நிலம் (பூமி)
விநாயகரின் மடித்த பாதங்களில் ஒன்று பூமியைக் குறிக்கிறது.
நீர்
சரிந்த அவரது தொந்தி, நீரைக் குறிக்கும்.
நெருப்பு
அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கிறது.
காற்று
இரண்டு புருவங்களுக்கு இடையே உள்ள அரை வட்டம் காற்றைக் குறிக்கிறது.
ஆகாயம்
இரண்டு புருவங்களின் அரைவட்டத்தின் நடுவில் உள்ள வளைவு ஆகாயத்தைக் குறிக்கும்.
இதையும் படிக்கலாம் : விநாயகரின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்..!