மலையரசி மாதரசி மங்காத புகழரசி
மாதவத்துப் பேரரசியே
மாணிக்கத் தேரேறி மகிழ்வாக பவனி வரும்
மங்கலத் தாயரசியே!
கலையரசி கயலரசி கனிவான மொழியரசி
கற்கண்டுச் சொல்லரசியே
காவியத் தமிழ் நெஞ்சில் கருணையாம் நிலைத்து
களிக்கின்ற பூவரசியே!
சிலையாக நின்றாலும் சீரான வாழ்வு தரும்
செம்மை சேர் எழிலரசியே
செவ்வானம் மொழிகின்ற சிங்கார அருள் முத்துத்
தேவியவள் அருளரசியே!
நிலையான வாழ்வுக்கு நீங்காத ஒளியூட்டும்
நெறியான தாய் அரசியே
நித்தமும் சித்தத்தில் நின்றுமே அருளூட்டும்
நீடு புகழ் ராஜேஸ்வரியே!!
இதையும் படிக்கலாம் : அங்காளம்மா எங்கள் செங்காளம்மா பாடல் வரிகள்..!