நம்முடைய வாழ்க்கையில் 108 என்ற எண்ணை அடிக்கடி கேட்கிறோம். 108 தேங்காய் உடை, 108 தோப்புக்கரணம் போடு இப்படியெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு எண்ணுக்கும் வெவ்வேறு அர்த்தம் உண்டு. அதிர்ஷ்ட எண் என்று சொன்னால் 777 என்று சொல்லுவாங்க. பேய்களின் எண் என்ன என்று கேட்டால் 666 என்று சொல்வார்கள். 108க்குப் பின்னால் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சை விடுகின்றான். ஒரு மணி நேரத்திற்கு 900 முறையாகும் (60×15). இதுவே ஒரு நாளைக்கு இந்த கணக்கை போட்டால் 15x60x24 என்னும் போது 21,600 முறை என்று வருகிறது. இந்த கணக்கை இரவு பகல் என்று பிரித்து பார்த்தால் 10,800 முறை வருகிறது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு அதிகம்.
108 என்பது பௌத்தம் மற்றும் இந்து மதத்தில் ஒரு புனிதமான எண். 108 வைணவர்களுக்கும் புனிதமாக கருதப்படுகிறது. விஷ்ணுவின் 108 திவ்யதேசம் என்று கூறப்படுகிறது. இதில் 108 விஷ்ணு கோவில்கள் உள்ளன. நான்கு திசைகளிலும் மொத்தம் 27 நட்சத்திர கூட்டம் உள்ளன. இங்கேயும் 108 வருகிறது. 9 கிரகங்களுடன் 12 ராசிகள் சேர்ந்தால் 108 என்ற எண் வரும்.
நமது உடலின் அதிகபட்ச வெப்பத்தை தாங்கும் திறன் 108°F ஆகும். அதன் பிறகு ஒவ்வொரு டிகிரி ஃபேரன்ஹீட்க்கும் நம் உடலில் உள்ள செல்கள் இறக்கின்றன.
பரதநாட்டியத்தின் கரணங்களின் எண்ணிக்கை 108. ஆச்சரியம் என்னவென்றால், ஒவ்வொரு செய்கை என்று சொல்வார்கள் அதுவும் மொத்தம் 108 உள்ளது. இதை நம் கோவில்களில் உள்ள சிற்பங்களில் காணலாம். நான்கு வேதங்களில் 108 உபநிடதங்கள் உள்ளன. ரிக் வேதத்தில் 10, யஜூர் வேதத்தில் 51, சாம வேதத்தில் 16, அதர்வண வேதத்தில் 31 என்று மொத்தம் 108 உள்ளது.
நம் உடலில் 108 அழுத்த புள்ளிகள் உள்ளன. சீக்கிய மற்றும் சீன புத்த ஜெபமாலைகளில் 108 முத்துக்கள் மட்டுமே உள்ளன. திபெத்திய புத்த மதத்தில், பாவங்களின் எண்ணிக்கை 108 என்று கூறப்படுகிறது. புத்தர் முக்தி அடைய 108 படிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. ஜப்பானில், புத்தாண்டு காலமான ஷிண்டேவின் போது 108 முறை மணிகள் அடிக்கப்படுகின்றன. இதனால் மனித பாவம் மறைந்து விடும் என்று நம்பப்பட்டது.
முக்திநாத் 108 நீரூற்றுகளைக் கொண்டது. உத்தரகாண்டில் 108 சிவன் கோவில்கள் உள்ளன. இறுதியாக, அவசரகாலத்தில் நாம் அழைக்கும் ஆம்புலன்ஸ் எண் 108.
108 என்ற எண் ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல், கணிதம் என பல்வேறு துறைகளிலும் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். இது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது ஏதேனும் அண்ட ரகசியத்தை வைத்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் இது பிரமிக்க வைக்கிறது.
இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!