காலையில் சூரியன் உதிக்கும் முன் எழுந்து கோலமிடுவது நல்லது. அதிகாலையில் கோலம் போட்டால் கஷ்டங்கள் நீங்கும். காலை 6 மணிக்கு முன் கோலம் போட வேண்டும்.
காலையில் முகம் கழுவி திலகம் பூசிவிட்டு வெளியே சென்று கோலம் போடுங்கள். காலையில் எழுந்து அப்படியே வெளியே சென்று கோலம் போடக்கூடாது.
கோலாப்பொடியுடன் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம். வெறும் பச்சரிசி மாவில் கூட கோலம் போடலாம்.
வாசலில் கோலமிடுவது, அழகுக்கு மட்டுமல்ல. தீய சக்திகள் நம் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் தான் கோலமிடுகிறோம்.
உட்கார்ந்த படி போடக்கூடாது. வலது கையால் மட்டுமே கோலம் போட வேண்டும்.
இரட்டைக் கோலம் மங்கலத்தைக் குறிக்கும், ஒரு கோடு, மூன்று கோலம் அமங்கலத்தைக் குறிக்கிறது. நாலிழைக் கோலம் பண்டிகைக் காலத்திற்கு ஏற்றது.
புள்ளிகளை வைக்கும் போது, ஏணியில் ஏறுவது போன்ற ஏறுவரிசையில் வைக்கவும். வரிகளும் அதே வழியில் வைக்கப்பட வேண்டும். மேலிருந்து கீழாக போட வேண்டாம்.
இதையும் படிக்கலாம் : மகாலட்சுமியின் அருளை குறைவின்றி பெற மந்திரம்..!