உம்பர்தருத் தேனுமணிக் – கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் – துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் -பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே
தம்பிதனக் காகவனத் – தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் – கனியோனே
அன்பர்தமக் கான நிலைப் – பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : நினது திருவடி (விநாயகர்) – திருப்புகழ் 4