துளசி விஷ்ணுவுக்கு உகந்தது.
புனித மூலிகையான துளசியின் பெருமை அளவிட முடியாதது.
ஈஸ்வரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை வழிபட்டனர்.
துளசியை வழிபடுவதால் நற்குணம், ஒழுக்கம், வளம், செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் போன்றவை பெருகும்.
துளசி 400 விதமான நோய்களை குணப்படுத்தும்.
ஆயுர்வேத நூல்கள் துளசி “சல்லிய கரணி ” எனப்படும் உயிர் கொடுக்கும் ஆற்றலை வழங்குகிறது என்று கூறுகிறது.
ஆண் பெண் இருபாலரும் துளசி செடிகளை வளர்த்து தண்ணீர் ஊற்றி வழிபட வேண்டும்.
துளசி மாடத்தில் இருந்து வேர் மண்ணை நெற்றியில் பூச வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு விருப்பமான கணவர் அமைய துளசி வழிபாடும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும்.
துளசி மாடத்தில் துளசியை வைத்து வாஸ்து தோஷ வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாம் : துளசி வளர்ப்பு எமபயம் போக்கும்..!