சந்ததம் பந்தத் – தொடராலே
சஞ்சலந் துஞ்சித் – திரியாதே
கந்தனென் றென்றுற் – றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் – றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் – புணர்வோனே
சங்கரன் பங்கிற் – சிவைபாலா
செந்திலங் கண்டிக் – கதிர்வேலா
தென்பரங் குன்றிற் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : சருவும்படி (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 14