பயத்தைப் போக்க எந்தெந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
சிலர் இரவும் பகலும் பயத்துடன், தீய எண்ணங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால் பயப்படுவதற்கு சரியான காரணம் இல்லை. தேவையற்ற அச்சங்களிலிருந்து தப்பிக்க வழிபடவேண்டிய தெய்வம் காளி.
காளியை வழிபட்டால் பயம் பஞ்சாய் பறந்து விடும். தேவையற்ற பயமுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் காளி கோயிலுக்குச் சென்று வழிபடலாம். காளி கோவில் அருகில் இல்லை என்றால் துர்க்கையை வழிபடலாம்.
காளி அல்லது துர்க்கையின் முன் அமர்ந்து, எலுமிச்சை பழத்தை கையில் பிடித்து, ஓம் காளி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை உச்சரிக்கவும். அந்த பழங்களைப் பிழிந்து, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து பிரசாதமாக குடிக்கவும். பயம் நிச்சயமாக உங்களை விட்டு விலகும்.
இதையும் படிக்கலாம் : வக்கிரகாளியம்மன் கவசம்