இயலிசையி லுசித வஞ்சிக் – கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் – துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் – கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் – தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் – தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் – தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் – பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 32