திருத்தணி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 3வது தொகுதியாக திருத்தணி தொகுதி உள்ளது. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் இத்தொகுதி அமைந்துள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | எம். துரைக்கண்ணு | இந்தியத் தேசிய காங்கிரசு | 24,312 |
1962 | சி. சிரஞ்சீவலு நாயுடு | சுயேச்சை | 36,884 |
1967 | கே. வினாயகம் | இந்தியத் தேசிய காங்கிரசு | 27,123 |
1971 | எ. ச. தியாகராஜன் முதலியார் | திமுக | 43,436 |
1977 | ஆர். சண்முகம் | அதிமுக | 29,070 |
1980 | ஆர். சண்முகம் | அதிமுக | 35,845 |
1984 | ஆர். சண்முகம் | அதிமுக | 41,669 |
1989 | பி. நடராசன் | திமுக | 35,555 |
1991 | இராசன்பாபு என்கிற தணிகை பாபு | அதிமுக | 50,037 |
1996 | ஈ. ஏ. பி. சிவாசி | திமுக | 58,049 |
2001 | ஜி. இரவிராசு | பாமக | 58,549 |
2006 | ஜி. ஹரி | அதிமுக | 52,871 |
2011 | மு.அருண் சுப்பிரமணியம் | தேமுதிக | 95,918 |
2016 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 93,045 |
2021 | ச. சந்திரன் | திமுக | 1,18,005 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,37,563 | 1,42,832 | 31 | 2,80,426 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை,ருக்குமணிபுரம், கொண்டபுரம்,மதுராபுரம்,எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்.
பள்ளிப்பட்டு வட்டம்; திருத்தணி வட்டம்.