மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 7வது தொகுதியாக மதுரவாயல் தொகுதி உள்ளது. இத்தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | ஜி. பீம் ராவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 96,844 |
2016 | பா. பெஞ்சமின் | அதிமுக | 99,739 |
2021 | க. கணபதி | திமுக | 1,21,298 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 2,18,112 | 2,14,592 | 134 | 4,32,838 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அம்பத்தூர் (நகராட்சி) வார்டு எண் – 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (சென்சஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (சென்சஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்).
அம்பத்தூர் வட்டம் (பகுதி)
அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.