களபம் ஒழுகிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 43 

களபம் ஒழுகிய புளகித முலையினர்
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் – எவரோடுங்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் – நகையாடிப்

பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு – குழைவோடே

பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை யுடையவர் உறவினை விடஅருள் – புரிவாயே

அளையில் உறைபுலி பெறுமக வயிறரு
பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுடன் – உருகாநீள்

அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர – விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் – மருகோனே

துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையில் அலையெறி திருநகர் உறைதரு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கனங்கள் கொண்ட (திருச்செந்தூர்) – திருப்புகழ் 44 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *