கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் – தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் – றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் – றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் – றடைவேனோ
சிலையென வடமலை யுடையவர் அருளிய
செஞ்சொற் – சிறுபாலா
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
செந்திற் – பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் – புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : சங்குபோல் மென் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 55