தண் தேனுண்டே (திருச்செந்தூர்) – திருப்புகழ் 61

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் – குழல்மானார்

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் – றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் – குடில்வேறாய்

வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் – கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் – குமரேசா

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் – கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் – புயவேளே

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தண்டை அணி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 62 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *