நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது – மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் – தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய – நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல – மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற – முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை – விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித – வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : நிறுக்குஞ் சூதன (திருச்செந்தூர்) – திருப்புகழ் 73