ஆடிப் பெருக்கு எனப்படும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய நட்சத்திரம் மற்றும் திதி எதுவாக இருந்தாலும், செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
இயற்கை சக்திகளின் அடிப்படையில் சூரியனுக்கு அடுத்தபடியாக சந்திரன் மிக முக்கியமான கிரகம்.
காலபுருஷனின் நான்காம் வீடு சந்திரனின் ஆட்சி வீடான கடகம்.
காலச்சக்கரத்தின் நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் சொத்து, பொழுதுபோக்கு, போக்குவரத்து, வாகனம் போன்றவற்றை வழங்க வல்லவர். சந்திரன் மனோகாரகன், அதாவது மனதை ஆள்பவன்.
சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோகமாகவும், அது ராகு-கேது மற்றும் சனி போன்ற கிரகங்களுடன் சேர்ந்தால் அவயோக தோஷமாகவும் மாறும். சந்திரன் தரும் யோகம் வாழ்வின் உச்சத்தை அடையச் செய்யும்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு சந்திர யோகம் இருந்தால், அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்தக் குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறும்.
அந்த அளவு யோகத்தை வழங்கக்கூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரனால் தண்டிக்கப்பட்டால், வறுமை, தண்ணீரில் கண்டம், திருமணத்தடை, தோல்வி, மனநிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.
கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும்.
எனவே, ஆடி மாதத்தில் கால புருஷ 5ம் அதிபதி சூரியன் கால புருஷ 4ம் அதிபதி சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கும் போது தென்மேற்கு பருவ மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது ஆடிப்பெருக்கு என கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தமிழகத்தில் நீர்நிலைகள் அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். அனைத்து ஆறுகளும் தண்ணீரால் நிரம்பி காணப்படும்.
இதையும் படிக்கலாம் : ஆடி மாதத்தின் சிறப்புகள்