ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி பூமி முழுவதும் பரவி உலக உயிர்களைக் காக்கும். இக்காலத்தில் விரதம் இருந்து அம்மனை மகிழ்வித்து வழிபாடு செய்தால், அம்மன் மகிழ்ந்து நமக்கு வேண்டிய வரங்களை வழங்குவாள் என்பது நம்பிக்கை. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தாலி பாக்கியம் கிடைக்க பல பெண்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் விரதம் மேற்கொள்கின்றனர். இந்த சிறப்பு ஆடி மாதம் ஜூலை 17ம் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நிறைவடைகிறது.
ஆடித்தபசு, ஆடிப்பெளர்ணமி | ஜூலை 21 | ஆடி 05 (ஞாயிறு) |
ஆடிக்கிருத்திகை | ஜூலை 29 | ஆடி 13 (திங்கள்) |
ஆடிப்பெருக்கு | ஆகஸ்ட் 03 | ஆடி 18 (சனி) |
ஆடி அமாவாசை | ஆகஸ்ட் 04 | ஆடி 19 (ஞாயிறு) |
ஆடிப்பூரம் | ஆகஸ்ட் 07 | ஆடி 22 (புதன்) |
நாக சதுர்த்தி | ஆகஸ்ட் 08 | ஆடி 23 (வியாழன்) |
கருட பஞ்சமி, நாக பஞ்சமி | ஆகஸ்ட் 09 | ஆடி 24 (வெள்ளி) |
வரலட்சுமி விரதம் | ஆகஸ்ட் 16 | ஆடி 31 (வெள்ளி) |
இதையும் படிக்கலாம் : ஆடிப்பூரம் மனதுக்கேற்ற மணாளனை பெற உதவும்..!