ஆடி அமாவாசை..!

ஆடி அமாவாசை பித்ரு காரியங்களுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே.

தட்சிணாயனத்தின் போது வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாகும். ஆடி மாதத்தில், சந்திரன் ஆட்சி செய்யும் ராசியான கடக ராசியை சூரியன் சஞ்சரிக்கிறார். சூரியன் ஒரு சிவன் அம்சம் மற்றும் ஆடி அமாவாசையின் போது, ​​சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் இணைந்து சந்திரனின் ஆதிக்கம் அதிகரிக்கிறது.

Aadi amavasai Tharpanam

அதனால் தான் ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது. அமாவாசையின் போது ஏற்படும் மாற்றங்களால் கடல் நீரில் புதிய ஆற்றல் உருவாகிறது. எனவே, இந்நாளில் புனித தலமான கடல் மற்றும் நீர்நிலைகளில் நீராடுவது உடல் நலத்திற்கு நல்லது. மேலும், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜை செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.

இந்நாளில் நீர்நிலையில் பித்ருகள் பூஜை செய்து வேதவிற்பன்ன ருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பின்னர், வீடு திரும்பி, முன்னோர்களின் படங்களுக்கு முன்பாக தலைவாழை இலையில் பலவித காய்கறிகளை சமைத்து வடை, பாயசம் வைத்து வழிபட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை செய்ய வேண்டும்.

maariamman

இப்படி செய்தால் உங்கள் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும், மேலும் உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் ஓடிவிடும். அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாக செய்யாவிட்டால் குடும்பத்தில் குழப்பம், சண்டை, நோய்கள், வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.

அமாவாசையில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து முன்னோர்களை போற்றி வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும், கடன் தீரும், வம்ச விருத்தியும் உண்டாகும்.

இதையும் படிக்கலாம் : ஆடிப்பெருக்கு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *